நிக்கோலஸ் மதுரோவின் முதல் புகைப்படத்தை வெளியிட்ட டிரம்ப்: உலக அரசியலில் பரபரப்பு
ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டது தொடர்பான புகைப்படத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.
நிக்கோலஸ் மதுரோ கைது
ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ தலைமையிலான வெனிசுலா அரசு போதைப்பொருள் கடத்தல் ஆட்சி நடத்தி கூறி வெனிசுலா மீது அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தியது.

இதனை தொடர்ந்து அந்நாட்டின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்க படைகள் கைது செய்து இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும் வெனிசுலாவில் ஆட்சி மாற்றம் மற்றும் அதன் எண்ணெய் வளங்கள் மீது அமெரிக்கா நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விளக்கி இருந்தார்.
புகைப்படத்தை வெளியிட்ட டிரம்ப்
ஜனாதிபதி மதுரோ மற்றும் மனைவி கைது செய்யப்பட்டது குறித்து வெனிசுலா அரசு எந்தவொரு தகவலையும் உறுதிப்படுத்தவில்லை.
Nicolas Maduro on board the USS Iwo Jima. pic.twitter.com/omF2UpDJhA
— The White House (@WhiteHouse) January 3, 2026
இந்நிலையில் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டது தொடர்பான புகைப்படத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.
தன்னுடைய சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியல் தளத்தில் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அமெரிக்க படைகளின் கட்டுப்பாட்டில் இருப்பது போன்ற புகைப்படத்தை டிரம்ப் வெளியிட்டுள்ளார்.
மேலும் அதில், யுஎஸ்எஸ் ஐவோ ஜிமா(USS Iwo Jima) கப்பலில் மதுரோ இருப்பதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |