ஹார்முஸ் ஜலசந்திக்கு புதிய பெயர் சூட்டிய டிரம்ப்: வைரலாகும் Truth Social பதிவு
Trump Renaming Strait of Hormuz to Trump Strait : ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தியை டிரம்ப் ஜலசந்தி என பெயரிட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பரிந்துரைத்துள்ளார்.
டிரம்ப் ஜலசந்தி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், மத்திய கிழக்கின் முக்கிய கடல் வழித் தடமான ஹார்முஸ் ஜலசந்திக்கு(Strait of Hormuz), டிரம்ப் ஜலசந்தி(Trump Strait) என பெயர் மாற்றம் செய்ய பரிந்துரைத்துள்ளார்.
இது தொடர்பாக தன்னுடைய சமூக வலைதள பக்கமான ட்ரூத் சோஷியல் பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பில், ஈரானுடனான மோதலுக்கு மத்தியில் ஹார்முஸ் ஜலசந்தியானது அமெரிக்க படைகளின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளதால் ஹார்முஸ் ஜலசந்தியின் பெயரை ட்ரம்ப் ஜலசந்தி என மாற்றலாமா? என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அமெரிக்காவை போலவே இதுவும் முன்பு இருந்ததை விட சூடாக இருக்கும் என்றும் டிரம்ப் அதில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்றதில் இருந்து பல சர்ச்சைக்குரிய புவியியல் பெயர் மாற்றங்களை செய்து வரும் நிலையில், அந்த வரிசையில் ஹார்முஸ் ஜலசந்தியும் இணைந்துள்ளது.
It's got a nice ring to it pic.twitter.com/Fmzc9iUu8u
— The White House (@WhiteHouse) September 2, 2026
2025ம் ஆண்டு ஜனவரியில் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற முதல் நாளிலேயே மெக்சிகோ வளைகுடாவை கல்ப் ஆப் அமெரிக்கா(Gulf of America) என்று பெயர் மாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |