ரஷ்யாவிடமிருந்து யுரேனியத்தை இறக்குமதி செய்யும் அமெரிக்கா: இந்தியாவின் கேள்வியால் டிரம்புக்கு வந்த சிக்கல்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உலக நாடுகளுக்கு அதிகப்படியான வரி விதித்து வரும், ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்யும் யுரேனியம் மற்றும் உரம் குறித்து தனக்கு தெரியாது என்று பதிலளித்துள்ளார்.
இந்தியா மீதான டிரம்பின் வரி விதிப்பு
ரஷ்யாவுடன் வர்த்தக தொடர்பில் இருக்கும் நாடுகள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதிய வரி விகிதங்களை அறிவித்து வருகிறார்.
அந்த வரிசையில், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அதிகமாக கச்சா எண்ணெய்களை இறக்குமதி செய்வதாக குறிப்பிட்டு, இந்தியா மீது புதிய வரி விதிப்பு மிரட்டல்களை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்டு இருந்தார்.
அதில், இந்தியாவுக்கு 25% வரி விதிக்கப்பட்டு இருப்பதையும், அவை மேலும் உயர்த்தப்படும் என்று குறிப்பிட்ட டிரம்ப், ரஷ்யாவுடனான இந்தியாவின் வர்த்தகம் போருக்கான பலத்தை ரஷ்யாவுக்கு வழங்குவதாக குறிப்பிட்டு இருந்தார்.
இருப்பினும் இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் வர்த்தகம் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது.
யுரேனியம் மற்றும் உரம் இறக்குமதி
இந்நிலையில் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் தொடர்பாக கூட்டப்பட்ட செய்தியாளர் சந்திப்பில், ரஷ்யாவிடம் இருந்து அமெரிக்கா யுரேனியம் மற்றும் உரம் இறக்குமதி செய்து வருகிறது என்ற இந்தியாவின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக டிரம்பிடம் கேள்விகள் எழுப்பப்பட்டது.
இந்த கேள்விகளுக்கு பதிலளித்த டொனால்ட் டிரம்ப், “அது பற்றி தனக்கு தெரியாது என்றும், நான் ஆராயந்து பார்க்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யா- அமெரிக்கா வர்த்தகம்
உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் தொடங்கி, வர்த்தக தடைகள் விதிக்கப்பட்ட பிறகும் அமெரிக்கா தொடர்ந்து ரஷ்யாவுடன் வர்த்தம் மேற்கொண்டு வருகிறது.
சுமார் 24.51 பில்லியன் அமெரிக்க டொலர் வர்த்தகத்தை அமெரிக்கா கடந்த 2022ம் முதல் இதுவரை ரஷ்யாவுடன் மேற்கொண்டுள்ளது.
2024 ம் ஆண்டில் மட்டும் அமெரிக்கா ரஷ்யாவிடம் இருந்து 878 மில்லியன் அமெரிக்க டொலர் பல்லேடியம், 1.27 பில்லியன் அமெரிக்க டொலர் உரம் மற்றும் 624 மில்லியன் அமெரிக்க டொலர் புளூட்டோனியம் ஆகியவற்றை இறக்குமதி செய்துள்ளது.
டிரம்புக்கு எதிராக எழுந்துள்ள விமர்சனம்
இந்நிலையில் டிரம்பின் செயல்பாடுகளுக்கு அவரது சொந்த குடியரசு கட்சியினர் மத்தியிலேயே எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
ஐ.நாவின் முன்னாள் அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி, இந்தியாவின் மீதான டிரம்பின் நடவடிக்கைகளுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதில், முக்கிய எதிர்ப்பு நாடுகளான சீனா, ஈரான் ஆகியவற்றுக்கு விலக்கு அளித்து விட்டு, இந்தியா போன்ற நீண்ட நாள் நாட்டிற்கு வரிவிதிப்பு ஏற்க முடியாதது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |