உக்ரைன் போரை 24 மணி நேரத்தில் முடித்துவைப்பதாக கூறியது குறித்து ட்ரம்பிடம் கேள்வி: அவரது பதில்
அமெரிக்க ஜனாதிபதியாக தான் பதவியேற்றதும், 24 மணி நேரத்தில் உக்ரைன் போரை முடித்துவைப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார் ட்ரம்ப். சமீபத்தில் அது குறித்து ட்ரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
24 மணி நேரத்தில்...
ட்ரம்ப், தான் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதும் 24 மணி நேரத்தில் உக்ரைன் போரை முடித்துவைப்பதாக கூறியிருந்தார்.
உக்ரைனியர்களும் ரஷ்யர்களும் உயிரிழக்கிறார்கள். அவர்கள் உயிரிழப்பதை நிறுத்த விரும்புகிறேன்.
அதை நான் 24 மணி நேரத்தில் செய்துமுடிப்பேன் என்று கூறியிருந்தார் ட்ரம்ப்.
ஆனால், ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்று 54 நாட்கள் ஆகிறது. இன்னமும் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
ஆகவே, 24 மணி நேரத்தில் உக்ரைன் போரை முடித்துவைப்பதாக வாக்குறுதி அளித்தது குறித்து சமீபத்தில் ட்ரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
ட்ரம்பின் பதில்
24 மணி நேரத்தில் உக்ரைன் போரை முடித்துவைப்பதாக, தான் அந்த நேரத்தில் கேலியாக கூறியதாக தெரிவித்துள்ளார் ட்ரம்ப்.
அதாவது, போர் முடியவேண்டும் என விரும்புகிறேன் என்னும் அர்த்தத்தில்தான் நான் அப்படிக் கூறினேன்.
அதில் வெற்றி பெறுவேன் என்றும் நான் நினைக்கிறேன் என்று இப்போது கூறியுள்ளார் ட்ரம்ப்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |