41 நாடுகள் மீது பயணத் தடை விதிக்கவிருக்கும் ட்ரம்ப் நிர்வாகம்
புதிய தடை விதிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக டசின் கணக்கான நாடுகளின் குடிமக்களுக்கு கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க ட்ரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல் கசிந்துள்ளது.
கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்
குறித்த பட்டியலில் மூன்று குழுக்களாக மொத்தம் 41 நாடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆப்கானிஸ்தான், ஈரான், சிரியா, கியூபா மற்றும் வட கொரியா உள்ளிட்ட 10 நாடுகள் உட்பட்ட முதல் குழு முழுமையான விசா தடைக்கு உட்படுத்தப்படும்.
இரண்டாவது குழுவில் எரித்திரியா, ஹெய்தி, லாவோஸ், மியான்மர் மற்றும் தெற்கு சூடான் உள்ளிட்ட ஐந்து நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளது. இவர்கள் சில விதிவிலக்குகளுடன், சுற்றுலா மற்றும் மாணவர் விசா மற்றும் பிற புலம்பெயர்ந்த விசா உள்ளிட்டவையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
மூன்றாவது குழுவில் மொத்தம் 26 நாடுகள் உட்படுத்தப்பட்டுள்ளது. பெலாரஸ், பாகிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் 60 நாட்களுக்குள் குறைகளை நிவர்த்தி செய்ய முயற்சிக்காவிட்டால், அமெரிக்க விசா வழங்கலை ஓரளவு நிறுத்தி வைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றே தகவல் கசிந்துள்ளது.
ஒப்புதல் அளிக்கப்படவில்லை
ஆனால், ட்ரம்ப் நிர்வாகம் மற்றும் அமெரிக்க வெளிவிவகார செயலர் மார்கோ ரூபியோ ஆகியோரால் இன்னமும் ஒப்புதல் அளிக்கப்படவில்லை என்றே அதிகாரிகள் சிலரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொனால்டு ட்ரம்பின் முதல் ஆட்சி காலத்தில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மை கொண்ட 7 நாடுகள் மீது அதிரடியாகப் பயணத் தடை விதித்தார். ஆனால், பல்வேறு சட்டப் போராட்டங்களுக்கு முடிவில் உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |