வெளிநாட்டு மாணவர் இன்டர்ன்ஷிப் மீது டிரம்ப் நிர்வாகம் கடும் கட்டுப்பாடு
Trump restricts foreign student internships: வெளிநாட்டு மாணவர்களுக்கான இன்டர்ன்ஷிப்பில் கடுமையானா கட்டுப்பாடுகளை டிரம்ப் கொண்டுவருகிறார்.
டிரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் வெளிநாட்டு மாணவர்களின் Curricular Practical Training (CPT) அனுமதிகளை கடுமையாக கட்டுப்படுத்தும் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

CPT என்பது வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் பாடத்திட்டத்துடன் தொடர்புடைய இன்டர்ன்ஷிப் அல்லது பயிற்சிகளை மேற்கொள்ள அனுமதிக்கும் திட்டமாகும்.
புதிய வழிகாட்டுதல்
ஆனால், சமீபத்தில் பல CPT அனுமதிகள் விதிகளை மீறுவதாக கண்டறியப்பட்டதால், US Immigration and Customs Enforcement (ICE) உட்பட்ட Student and Exchange Visitor Program (SEVP) ஆகஸ்ட் 24-ஆம் திகதி புதிய வழிகாட்டுதலை வெளியிட்டது.
அதில், CPT அனுமதி பெறும் பயிற்சிகள் பாடத்திட்டத்துடன் நேரடியாக இணைந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. விதிகளை பின்பற்றாத பல்கலைக்கழகங்கள் வெளிநாட்டு மாணவர்களை சேர்க்கும் சான்றிதழை இழக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால், UCLA மற்றும் UC Berkeley போன்ற பல்கலைக்கழகங்கள் சில CPT விண்ணப்பங்களை தற்காலிகமாக நிறுத்தி ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளன.
UC Berkeley, புதிய அறிவிப்பு முந்தையதை விடக் கடுமையானதாக இருப்பதாகவும், சில இன்டர்ன்ஷிப் அனுமதிகளை இனி வழங்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.
அமெரிக்க உள்துறை அமைச்சகம், “விதிகளில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், டிரம்ப் நிர்வாகத்தில் இந்த திட்டத்தின் தவறான பயன்பாடு இனி சகித்துக்கொள்ளப்படாது” என்று தெரிவித்துள்ளது.
இது கல்வி துறையை மட்டுமல்லாமல், பல்கலைக்கழகங்களின் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள், பல்வகைமை திட்டங்கள், காலநிலை முயற்சிகள், பாலினக் கொள்கைகள் போன்றவற்றிலும் விசாரணைகள் நடத்தும் பரந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்.
சில மாணவர்களின் விசாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், Justice Department பல்கலைக்கழகங்களின் சேர்க்கை முறைகளையும் ஆய்வு செய்து, சில இடங்களில் கருப்பர் மற்றும் ஹிஸ்பானிக் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என குற்றம் சாட்டியுள்ளது. பல்கலைக்கழகங்கள் இதனை மறுத்துள்ளன.
இந்த நடவடிக்கைகள், அமெரிக்காவில் கல்வி பெறும் வெளிநாட்டு மாணவர்களுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.
இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் குறையக்கூடும் என்பதால், மாணவர்கள் தங்கள் கல்வி மற்றும் தொழில் திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |