சர்வதேச மாணவர்கள் வாழ்க்கையில் விளையாடும் ஜனாதிபதி ட்ரம்ப்... டசின் கணக்கானோரின் விசா ரத்து
அமெரிக்காவின் மிகப் பிரபலமான பல்கலைக்கழகங்களில் இருந்து மேலும் டசின் கணக்கான மாணவர்களின் விசாக்களை ஜனாதிபதி ட்ரம்ப் ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெளிநாட்டு மாணவர்கள்
இந்த விவகாரம் பல நிலைகளில் அதிர்வை ஏற்படுத்தியுள்ளதுடன், சிவில் உரிமை வாதிகள் மத்தியில் எச்சரிக்கையை தூண்டியுள்ளது. ஸ்டான்போர்ட் உள்ளிட்ட மிக முக்கியமான வளாகங்களில் இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளது.
ட்ரம்பின் இந்த அதிரடி நடவடிக்கைகளால், வெளிநாட்டு மாணவர்கள் இனி அமெரிக்காவில் கல்வி பயில்வதை தெவிர்க்க நேரலாம் என்ற அச்சம் கல்லூரி நிர்வாகங்களுக்கு ஏற்பட்டுள்ளது.
அத்துடன் வெளிநாட்டு மாணவர்களிடம் இருந்து குவியும் நிதியும் கைவிட்டுப் போகும் அபாயத்தையும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் நான்கு மாணவர்கள் மற்றும் இரண்டு சமீபத்திய பட்டதாரிகளின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஹார்வர்ட் பல்கலையில் மூன்று மாணவர்கள் மற்றும் இரண்டு சமீபத்திய பட்டதாரிகளின் மாணவர் விசாக்கள் ஞாயிற்றுக்கிழமை ரத்து செய்யப்பட்டன.
பாலஸ்தீனத்துக்கு ஆதரவான போராட்டங்களில் ஈடுபட்டுள்ள சர்வதேச மாணவர்களை நாடு கடத்தும் டிரம்ப் நிர்வாகத்தின் கடும்போக்கு நடவடிக்கைகளின் ஒருபகுதியாகவே மானவர்கள் விசாக்கள் ரத்து செய்யப்பட்டு வருகிறது.
மசாசூசெட்ஸ் ஆம்ஹெர்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் ஐந்து சர்வதேச மாணவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டன. மிச்சிகன் பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரின் விசாக்கள் வார இறுதியில் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையால் ரத்து செய்யப்பட்டன.
அமெரிக்கா திரும்ப முடியாது
அதில் ஒருவர் ஏற்கனவே கல்லூரி நிர்வாகத்தின் பரிந்துரையின் பேரில் அமெரிக்காவை விட்டு வெளியேறியுள்ளதாகவும் கூறப்படுகிறது. கொலராடோ பல்கலைக்கழக மாணவர்கள் அல்லது சமீபத்திய பட்டதாரிகள் பத்து பேர்களின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் பாதி பேர் மத்திய கிழக்கு நாட்டவர்கள் என்றே கூறப்படுகிறது. விசா ரத்து செய்யப்பட்ட மாணவர்கள் இனி ஒருபோதும் அமெரிக்கா திரும்ப முடியாது என்ற கடுமையான நடவடிக்கையும் ட்ரம்ப் நிர்வாகத்தால் எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் Stanford, UCLA, UC Berkeley, UC San Diego, UC Irvine, UC Davis உட்பட பல்வேறு கல்வி நிலையங்களில் டசின் கணக்கான மாணவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆனால் ட்ரம்ப் நிர்வாகத்தால், இந்த நடவடிக்கைகளுக்கான காரணம் ஏதும் தெரிவிக்கப்படவில்லை என்றே கல்லூரி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில மாணவர்கள் பழைய தவறான செயல்கள் அல்லது போக்குவரத்து விதிமீறல்கள் உட்பட கிரிமினல் குற்றங்களில் குறிவைக்கப்படுகிறார்கள். மற்றவர்கள் அரசியல் செயல்பாடுகள், குறிப்பாக பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவான எதிர்ப்புப் பங்கேற்பு காரணமாக வெளியேற்றப்படுகிரார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |