சீனாவுக்கு 125% வரி! மற்ற நாடுகளுக்கு 10% வரி, 90 நாள் அவகாசம்: டிரம்ப் அதிரடி
சீனா மீதான அதிரடி நடவடிக்கையாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சீனாவுக்கு 125% வரி விதிப்பை அறிவித்துள்ளார்.
சீனாவுக்கு 125% வரி
அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைகளுக்கு சீனா பதிலடி கொடுத்து இருந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமீபத்திய சமூக ஊடகப் பதிவொன்றில், சீனாவிலிருந்து வரும் பொருட்களுக்கான வரியை உடனடியாக 125% ஆக உயர்த்துவதாக அறிவித்துள்ளார்.
"உலகச் சந்தைகளுக்கு சீனா காட்டிய மரியாதைக் குறைவின் அடிப்படையில், அமெரிக்காவால் சீனாவுக்கு விதிக்கப்படும் வரியை உடனடியாக 125% ஆக உயர்த்துகிறேன்," என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "விரைவில், அமெரிக்காவையும் மற்ற நாடுகளையும் சுரண்டும் நாட்கள் இனி நீடிக்காது அல்லது ஏற்றுக்கொள்ளப்படாது என்பதை சீனா உணரும் என்று நம்புகிறேன்." எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
90 நாள் கால அவகாசம்
அதே நேரத்தில், சீனா மீதான வரிகள் தவிர மற்ற அனைத்து வரிகளுக்கும் 90 நாள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதுடன், மற்ற நாடுகளை பாதிக்கும் வரிகளை 10% ஆக குறைத்தும் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்த மற்ற நாடுகளுக்கான 10% வரி விதிப்பு எப்போது நடைமுறைக்கு வரும் என்பது 90 நாள் கால அவகாசத்திற்கு முன்பா அல்லது பின்பா என்பது தெளிவாக இல்லை.
மேலும், ஏற்கனவே 10% வரிக்கு உட்பட்ட நாடுகள், அதாவது பிரித்தானியா போன்ற நாடுகளுக்கு இந்த அறிவிப்பு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |