எதிரிகளை பொறுத்துக்கொள்ள முடியாது: கொலையாளியை மன்னித்த கிர்க்கின் மனைவிக்கு ட்ரம்பின் பதில்
அமெரிக்காவில் படுகொலை செய்யப்பட்ட சார்லி கிர்க் குறித்த நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட டொனால்ட் டிரம்ப், எதிரிகளை பொறுத்துக்கொள்ள முடியாது என்று கூறினார்.
சார்லி கிர்க்கின் நினைவஞ்சலி
அரிசோனாவின் Glendaleயில் சுட்டுக்கொல்லப்பட்ட சார்லி கிர்க்கின் நினைவஞ்சலி நிகழ்வு நடந்தது. ட்ரம்ப் நிர்வாகத்தின் உயர்மட்ட அதிகாரிகள் பல்லாயிரக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டனர்.
இதில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உயிரிழந்த கிர்க் குறித்து பல விடயங்களை பேசினார். மேலும் கிர்க்கின் மனைவி எரிகாவுக்கு ஆறுதல் கூறினார்.
நினைவஞ்சலியில் உரையாற்றிய எரிகா, தனது கணவரை கொன்ற கொலையாளி என்று கூறப்படும் 22 வயது இளைஞர் டைலர் ராபின்சனை மன்னிப்பதாக கூறினார்.
என் எதிரியை என்னால் தாங்க முடியாது
அதன் பின்னர் மேடையேறிய டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), தனது எதிரிகளுக்குக் கூட சிறந்ததை கிர்க் விரும்பினார் என்றும், ஆனால் அந்தக் கண்ணோட்டத்துடன் தான் உடன்படவில்லை என்றும் கூறினார்.
மேலும் பேசிய அவர், "அவர்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை. அங்குதான் நான் சார்லியுடன் உடன்படவில்லை! மன்னிக்கவும் எரிகா. ஆனால் இப்போது எரிகா என்னிடம் பேசலாம், ஒருவேளை அவர்கள் அது சரியல்ல என்று என்னை நம்ப வைக்கலாம். ஆனால் என் எதிரியை என்னால் தாங்க முடியாது! சார்லி கோபமாக இருக்கிறார்" என தெரிவித்தார்.
இந்த நிகழ்வினை ஒரு அரசு இறுதிச் சடங்கிற்கு ஒரு சில அமெரிக்க ஊடகங்கள் ஒப்பிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |