பாகிஸ்தானில் இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை..ஈரான் போர் முடிந்துவிட்டது - டொனால்ட் ட்ரம்ப்
ஈரான் போர் முடிவுக்கு மிக அருகில் இருப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமைதிப் பேச்சுவார்த்தை
பாகிஸ்தானில் ஈரானிய அதிகாரிகளுடன் இரண்டாம் சுற்று அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வெள்ளை மாளிகை தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உடனான நேர்காணலின் முன்னோட்ட காணொளியை செய்தியாளர் மரியா பார்டிரோமோ பதிவிட்டுள்ளார்.
அதில், "இது (போர்) முடிவுக்கு மிக அருகில் இருப்பதாக நான் நினைக்கிறேன். ஆம். அதாவது, இது முடிவுக்கு மிக அருகில் இருப்பதாகவே நான் கருதுகிறேன்" என ட்ரம்ப் கூறுகிறார்.
பாகிஸ்தானில் இரண்டாம் சுற்று
அதேபோல், இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கான திட்டங்களை ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகள் வகுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
துணை ஜனாதிபதி ஜே.டி.வேன்ஸ் மீண்டும் பாகிஸ்தானில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த தயாராகி வருவதாக வெளியான செய்திகளுக்கு இடையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |