இந்தியா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் துணையாக இருப்பேன்..ஆனால் மோடி இருந்தால்தான் - ட்ரம்ப்
பிரதமராக நரேந்திர மோடி இருந்தால் மட்டுமே இந்தியாவிற்கு உதவுவேன் என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வர்த்தக ஒப்பந்தங்கள்
ஜி7 உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க பிரதமர் டொனால்ட் ட்ரம்பும் இருதரப்பு சந்திப்பை நடத்தினர்.

அப்போது மாலுமிகளின் நலன், பாதுகாப்பு உறவுகள் மற்றும் வர்த்தக ஒப்பந்தங்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன.
ஈரானுடன் எட்டப்படும் எந்தவொரு ஒப்பந்தத்திலும், மாலுமிகள் பாதுகாப்பை உறுதி செய்வது ஒரு முக்கிய அங்கமாக இருக்கும் என்று நம்புவதாக பிரதமர் மோடி கூறினார்.
இந்தியா மீது எப்போதாவது தாக்குதல் நடத்தப்பட்டால்
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பேசும்போது, "இந்தியா மீது எப்போதாவது தாக்குதல் நடத்தப்பட்டால், நான் இந்தியாவிற்கு துணையாக இருப்பேன். ஆனால், பிரதமர் மோடி தலைவராக இருந்தால் மட்டுமே இந்தியாவிற்கு உதவுவேன். ஒருவேளை புதிய தலைவர் வந்தால், அதுபற்றி எனக்கு உறுதியாகத் தெரியாது" என்றார்.
மேலும், உயிரிழந்த இந்தியக் கடல்சார் பணியாளர்கள் குறித்தும் ட்ரம்ப் பேசினார்.
அவர் அது குறித்து தனக்கு தெரியும் என்றும், அது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், இது ஒரு "கடினமான தொழில்" என்றும் குறிப்பிட்டார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |