கோபத்தை தூண்டிய நியூயார்க் மேயரின் பேச்சு: டிரம்பின் பதில் என்ன?
இந்திய வம்சாவளியினரான ஒருவர், ஒரு இஸ்லாமியர், புலம்பெயர்ந்தோர் ஒருவர், நியூயார்க் நகரின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
புலம்பெயர்தலுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுத்துவரும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு புதிய மேயரின் பின்னணி பதற்றத்தை உருவாக்கியுள்ளதுபோல் தெரிகிறது.
நியூயார்க் மேயராகியுள்ள இந்திய வம்சாவளியினர்

ஸோக்ரான் மம்தானி என்பவர், நியூயார்க்கின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த ஸோக்ரான், இந்திய பெற்றோருக்குப் பிறந்தவர் ஆவார். ஸோக்ரானின் தாயாகிய மீரா நாயர், புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்.

ஸோக்ரானின் தந்தையான மஹ்மூத் மம்தானி, பம்பாயில் பிறந்தவர். மீரா, மஹ்மூத் தம்பதியர் உகாண்டா நாட்டிலிருந்தபோதுதான் ஸோக்ரான் பிறந்தார். பின்னர் அவரது குடும்பம் அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தது.
ட்ரம்ப் விமர்சனம்
மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டதும் ஸோக்ரான் ஆற்றிய உரை குறித்து ட்ரம்ப் விமர்சனம் முன்வைத்துள்ளார்.
.@POTUS on Zohran Mamdani: "For a thousand years, Communism has not worked... I tend to doubt it's going to work this time."
— Rapid Response 47 (@RapidResponse47) November 5, 2025
BRET: Did you see his speech?@POTUS: "Yeah, I thought it was a very angry speech... he's off to a bad start." pic.twitter.com/kPpbICK4OD
தனது உரையில் பல்வேறு அன்றாடக, நடைமுறை பிரச்சினைகள் குறித்து பேசிய ஸோக்ரான், பல ஆண்டுகளாக வாக்களிக்க வராத மக்கள், இந்த மேயர் தேர்தலில் வாக்களிக்க வந்ததாக தெரிவித்தார்.
தன்னை வரவேற்க ஏராளம் இளைஞர்கள், முதன்முறையாக வாக்களித்தவர்கள் வந்ததாக தெரிவித்த ஸோக்ரான், இதுவரை புலம்பெயர்ந்தோர் இருட்டில் மறைந்திருக்கவேண்டியவர்கள் என கூறப்பட்டது, ஆனால், நியூயார்க் புலம்பெயர்ந்தோரால் கட்டியெழுப்பப்பட்டது, இனி அது புலம்பெயர்ந்தோரால் நிர்வகிக்கப்பட இருக்கிறது என்று கூறினார்.
ஸோக்ரானின் உரை குறித்து ட்ரம்பிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அதற்கு பதிலளித்த ட்ரம்ப், அது மிக கோபமான உரை என்று நான் நினைக்கிறேன் என்றும், இது ஒரு மோசமான துவக்கம் என்றும் கூறினார் அவர்.

என் மீதான கோபத்துடன் ஸோக்ரான் பேசியது போலிருந்தது என்று கூறிய ட்ரம்ப், அவர் என்னிடம் இனிமையாக பழகவேண்டும் என எதிர்பார்க்கிறேன், ஏனென்றால், பல விடயங்களை நான்தான் ஒப்புதல் அளிக்கவேண்டியிருக்கும், அவரது ஆரம்பம் சரியாக இல்லை என்று நினைக்கிறேன் என்றார்.
சொல்லப்போனால், புலம்பெயர்தலை எதிர்க்கும் ட்ரம்புக்கு சவால் விடும் வகையில்ஸோக்ரானின் உரை அமைந்திருந்தது என்றே கூறலாம். ஆகவே, அது ட்ரம்பை எரிச்சலடைய வைத்துள்ளதையும் மறுக்கமுடியாது.
ஸோக்ரான் மேயராக போட்டியிடுவது தெரியவந்த நாள் முதல் ட்ரம்ப் அவரை இழிவாக பேசிவந்தார், ஸோக்ரான் தேர்தலில் ஜெயித்தால் நியூயார்க் நாசமாகிவிடும் என்றும் கூறியிருந்தார் ட்ரம்ப்.
ஆக, ஸோக்ரான் வெற்றி பெற்ற விடயம் ட்ரம்புக்கு ஆத்திரமூட்டியுள்ளதில் வியப்பேதுமில்லை எனலாம்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |