புடின் ரஷ்யாவை அழித்து வருகிறார்! டொனால்ட் ட்ரம்ப் அதிரடி குற்றச்சாட்டு
உக்ரைன் ஒப்பந்தத்தை மறுப்பதன் மூலம் விளாடிமிர் புடின் ரஷ்யாவை அழிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
சமாதான ஒப்பந்தம்
அமெரிக்காவின் ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப், உக்ரைன் மற்றும் ரஷ்யா சண்டை குறித்து பேசியுள்ளார்.
ரஷ்யா மீதான போரின் தாக்கத்தை விமர்சித்த அவர், பொருளாதாரப் போராட்டங்கள் மற்றும் பணவீக்கத்தை சுட்டிக்காட்டினார்.
அத்துடன் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ஒரு சமாதான ஒப்பந்தத்தில் ஆர்வத்தை வெளிப்படுத்தியதாகவும் கூறினார்.
ரஷ்யா பெரிய சிக்கலில் சிக்கப் போகிறது
மேலும் ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் குறித்து அவர் பேசும்போது, "புடின் ஒரு ஒப்பந்தம் செய்ய வேண்டும். உக்ரைன் சண்டை தொடர்பில் ஒப்பந்தம் செய்யாமல் அவர் ரஷ்யாவை அழித்து வருகிறார் என்று நான் நினைக்கிறேன். ரஷ்யா பெரிய சிக்கலில் சிக்கப் போகிறது என்று நான் நினைக்கிறேன்" என தெரிவித்தார்.
புடினை சந்திக்கும் திட்டங்களையும் வெளிப்படுத்திய ட்ரம்ப், அவரது முதல் பதவிக் காலத்தில் அவர்களின் முந்தைய உச்சிமாநாட்டையும் குறிப்பிட்டார்.
அத்துடன் உக்ரைனில் போரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர உறுதியளித்த ட்ரம்ப், அதற்காக ஜெலென்ஸ்கி ஒரு சமாதான ஒப்பந்தம் செய்ய விரும்புவதாகவும் தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |