இந்தியா என்னை விட சிறந்த நண்பரை கொண்டிருக்கவில்லை! அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்
இரண்டாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கூடும் என மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்
ஒரு ஜனாதிபதியாக என்னை விட சிறந்த ஒரு நண்பர் இந்தியாவுக்கு ஒருபோதும் இருந்தது இல்லை - டொனல்டு டிரம்ப்
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் சிறந்த நட்புறவை கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
நியூயார்க் நகரின் அருகே பெட்மின்ஸ்டர் பகுதியில் கோல்ப் விளையாட்டு கிளப்பில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் சிறப்பு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் இந்திய பிரதமர் மோடியுடன் சிறந்த நட்புறவை கொண்டிருப்பதாகவும், அவர் ஒரு சிறந்த மனிதர் என தான் நினைப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும் அவர் அமெரிக்க அரசியல் குறித்து கூறுகையில்,
'அமெரிக்காவை எடுத்துக் கொண்டால் நாங்கள் சிறந்த பொருளாதார நிலையை நோக்கி செல்கிறோம். தற்போது உள்ள பொருளாதார நிலைமையை சீர் செய்து, மிக பெரும் பொருளாதார நாடு என்ற பழைய நிலைக்கு கொண்டு வரபோகிறோம்.
PC: James Devaney/GC Images
எனது காலத்தில் இருந்தது போன்ற பொருளாதாரம் ஒருபோதும் இருந்தது இல்லை. ஆனால், இரண்டு ஆண்டுகளாக இல்லாத பொருளாதார நிலையை நாங்கள் மீட்டு கொண்டு வருவதற்கான பணிகளை செய்வோம்' என தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவர் தன்னை விட சிறந்த நண்பரை இந்தியா கொண்டிருக்கவில்லை என நினைப்பதாகவும், அதுபோன்ற உறவை தான் உருவாக்கி வைத்திருப்பதாக குறிப்பிட்டார்.
PC: PRAKASH SINGH/AFP VIA GETTY IMAGES