இந்தியாவில் ஐபோன் தயாரித்தால் 25% வரி! டிரம்ப் எச்சரிக்கை
இந்தியாவில் ஐபோன்கள் தயாரிக்கப்பட்டால், அவற்றுக்கு 25% வரி விதிக்கப்படும் என ஆப்பிள் நிறுவனத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆப்பிள் தனது உற்பத்தியை அமெரிக்காவிற்கு மாற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது டிரம்ப்பின் "அமெரிக்கா முதலில்" கொள்கையை இது மீண்டும் வலியுறுத்துவதாக பார்க்கப்படுகிறது.
ஆப்பிளுக்கான டிரம்ப்பின் எச்சரிக்கை
இது தொடர்பாக ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ள கருத்தில், "இந்தியாவில் ஐபோன்களை தயாரிக்க வேண்டாம்; அப்படி செய்தால் 25% வரி விதிக்கப்படும்," இந்தியாவில் ஆப்பிளின் உற்பத்தியை குறைத்து, அமெரிக்காவில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்தியாவில் அல்லது வேறு எந்த நாட்டிலும் ஐபோன்கள் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவிற்கு விற்பனைக்கு அனுப்பப்படுவதை தான் விரும்பவில்லை என்று டிரம்ப் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
[ZLEK3LC
இந்தியாவில் ஆப்பிளின் வளர்ச்சிப் பயணம்
டிரம்பின் இந்த அச்சுறுத்தல், ஆப்பிள் நிறுவனம் சீனாவில் இருந்து தனது உற்பத்தித் தளத்தை மாற்றி, இந்தியாவில் கணிசமாக விரிவாக்கி வரும் சூழ்நிலையில் வந்துள்ளது.
குறிப்பாக, மார்ச் 2025 நிலவரப்படி, இந்தியாவின் ஐபோன் உற்பத்தி $22 பில்லியனை எட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 60% அதிகரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விரைவான வளர்ச்சி, தொழில்நுட்ப ஜாம்பவானான ஆப்பிளுக்கு இந்தியா ஒரு முக்கிய உற்பத்தி மையமாக உருவெடுத்துள்ளதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. டிரம்ப்பின் பாதுகாப்புவாத கொள்கைகளுக்கு இது ஒரு சவாலாக அமைந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |