இந்தியாவை நாடும் ரஷ்ய ஆதரவு எண்ணெய் நிறுவனம்: 2030க்குள் செய்யப்போகும் திட்டம்
ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதியை இந்தியா நிறுத்தியதாக வெளியான செய்திகளை ட்ரம்ப் மேற்கோள்காட்டியுள்ளார்.
நயாரா எனர்ஜி
ரஷ்யாவின் ஆதரவு பெற்ற நிறுவனம் ஒன்று, இந்தியாவின் அரசு எண்ணெய் நிறுவனங்களை நாடுகிறது.
குஜராத்தின் Vadinarயில் உள்ள இந்தியாவின் இரண்டாவது பெரிய ஒற்றை-தள சுத்திகரிப்பு நிலையம் நயாரா எனர்ஜி (Nayara Energy).
இதன் திறன் ஆண்டுக்கு 20 மில்லியன் டன்கள் என்பதுடன், இந்தியாவின் சுத்திகரிப்பு உற்பத்தியில் சுமார் 8% பங்களிக்கிறது.
ஆனால் தற்போது இந்த வசதியை சுமார் 80% குறைக்கப்பட்ட திறனில் இயக்குகிறது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2030ஆம் ஆண்டுக்குள்
இந்த நிலையில், ட்ரம்பின் நெருக்கடிக்கு இடையே ரஷ்யா ஆதரவு பெற்ற இந்நிறுவனம் பெட்ரோல், டீசல் ஏற்றுமதியை இறக்கி வைக்க, இந்தியாவின் அரசு எண்ணெய் நிறுவனங்களை நாடுகிறது.
தற்போது பெற்றுவரும் இந்தியாவின் மொத்த உற்பத்தியான 7 சதவீதத்தை, 2030ஆம் ஆண்டுக்குள் 50 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
எனினும், ஜூலை 18ஆம் திகதி அன்று ரஷ்யாவின் எரிசக்தி மீதான ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் தடைகள் நயாரா எரிசக்தி செயல்பாடுகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
இந்தியாவிற்கு விடுக்கப்பட்ட கெடு முடிவடைந்ததைத் தொடர்ந்து, அமெரிக்க டொனால்ட் ட்ரம்ப் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய், இராணுவப் பொருட்களை வாங்கினால் 25% கூடுதல் அபராதம் என விதிக்கப்படும் என கண்டித்தார்.
ட்ரம்ப் கூறிய விடயம்
அமெரிக்கா தயாரித்த ஆறாவது தலைமுறை ஸ்டெல்த் போர் விமானமான F-35ஐ வாங்கப்போவதில்லை என்று இந்தியா தெரிவித்ததாக தகவல் வெளியானது. ரஷ்ய எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த ட்ரம்ப், "இந்தியா இனி ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கப்போவதில்லை என்பதை நான் புரிந்துகொள்கிறேன். நான் கேள்விப்பட்டது அது சரியா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. அது ஒரு நல்ல நடவடிக்கை. என்ன நடக்கிறது என்று பார்ப்போம்" என தெரிவித்தார்.
நயாரா எனர்ஜி 6,300க்கும் மேற்பட்ட எரிபொருள் நிலையங்களின் சில்லறை வலையமைப்பையும் நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |