அணுசக்தி மற்றும் கடல் வழி ஒப்பந்தம்: ஈரானுக்கு இது தான் கடைசி வாய்ப்பு: அமெரிக்கா எச்சரிக்கை
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள ஈரானுக்கு இது தான் கடைசி வாய்ப்பு என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம்
அமெரிக்கா - ஈரான் இடையிலான தாக்குதல் நடவடிக்கைகள் தொடர்ந்து வரும் நிலையில், இரு நாடுகளும் இடையில் முன்னதாக எட்டப்பட்ட ஒப்பந்தங்கள் அனைத்தும் தோல்வி அடைந்துள்ளன.
இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றமானது நீடித்து வருகிறது. திங்கட்கிழமை கூட ட்ரூத் சோஷியல் தளத்தில் டிரம்ப் வெளியிட்ட பதிவில், ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது.

அமெரிக்காவுடன் முறையான ஒப்பந்தம் அல்லது முழுமையான சரணடைதல் எட்டப்படாமல் இந்த முற்றுகை நிலைப்பாடு தொடரும் என்று வலியுறுத்தியுள்ளார்.
ஈரானுக்கு கடைசி வாய்ப்பு
இந்நிலையில் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், “ அவர்கள் அனைவரும் இதற்கு கடைசி வாய்ப்பு ஒன்றை கொடுக்க விரும்பினர். இது சாதாரணமாக நடக்க கூடிய ஒன்றல்ல. இந்த கடைசி வாய்ப்பை பயன்படுத்தி ஒரு நல்ல ஒப்பந்தத்தில் அவர்கள் கையெழுத்திட வேண்டும்.
அரசியல் ரீதியில் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கான நல்ல வாய்ப்பை ஈரான் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

ஈரான் - அமெரிக்கா இடையிலான இராணுவ மோதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அமைதிக்கான இந்த புதிய பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது முன்வைக்கப்படும் அமைதி ஒப்பந்தத்தில், ஹார்முஸ் ஜலசந்தியில் தடையற்ற வர்த்தக போக்குவரத்தும், அணுசக்தி திட்டங்கள் மீதான தடையும் ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் ஆகும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |