மேக்ரான் எப்போதுமே தவறாகத்தான் புரிந்துகொள்கிறார்: ட்ரம்ப் காட்டம்
ட்ரம்ப் குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்த கருத்தொன்றிற்கு காட்டமாக பதிலளித்துள்ளார் ட்ரம்ப்.
மேக்ரான் எப்போதுமே தவறாகத்தான் புரிந்துகொள்கிறார்
கனடாவில் நடைபெற்றுவரும் G7 உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முன்கூட்டியே புறப்பட்டுவிட்டார்.
அது குறித்து பேசிய பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், இஸ்ரேல் ஈரானுக்கிடையே போர் நிறுத்தம் செய்வதற்காகத்தான் ட்ரம்ப் முன்கூட்டியே G7 உச்சி மாநாட்டிலிருந்து புறப்பட்டுவிட்டதாக தெரிவித்தார்.
இந்நிலையில், மேக்ரானின் கருத்துக்கு பதிலளித்துள்ள ட்ரம்ப், மேக்ரான் எப்போதுமே தவறாகத்தான் புரிந்துகொள்வார் என்று காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.
Donald J. Trump Truth Social 06.17.25 01:15 AM EST pic.twitter.com/k0JMyK9Har
— Commentary Donald J. Trump Posts From Truth Social (@TrumpDailyPosts) June 17, 2025
சமூக ஊடகமான எக்ஸில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள ட்ரம்ப், புகழ் விரும்பியான ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், கனடாவில் நடைபெற்றுவரும் G7 உச்சி மாநாட்டிலிருந்து நான் புறப்பட்டுவிட்டதற்குக் காரணம் இஸ்ரேல் ஈரானுக்கிடையே போர் நிறுத்தம் செய்வதற்காக என்று கூறியுள்ளார்.
அது தவறு, நான் எதற்காக வாஷிங்டனுக்குத் திரும்பினேன் என்பது அவருக்குத் தெரியாது. ஆனால், நிச்சயமாக அது இஸ்ரேல் ஈரானுக்கிடையே போர் நிறுத்தம் செய்வதற்காக அல்ல.
அது இஸ்ரேல் ஈரானுக்கிடையே போர் நிறுத்தம் செய்வதைவிட பெரிய விடயம். வேண்டுமென்றே செய்கிறாரோ என்னவோ, மேக்ரான் எப்போதுமே தவறாகத்தான் புரிந்துகொள்கிறார் என்று காரசாரமாக பதிலளித்துள்ளார் ட்ரம்ப்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |