கிரீன்லாந்தைக் கைப்பற்ற முயற்சிக்க பிரித்தானியாதான் காரணம்: ட்ரம்ப் திடீர் தகவல்
அமெரிக்கா கிரீன்லாந்தைக் கைப்பற்ற முயற்சிப்பதற்கு பிரித்தானியாதான் காரணம் என ட்ரம்ப் திடீர் குண்டு ஒன்றைத் தூக்கிப் போட்டுள்ளார்.
பிரித்தானியாதான் காரணம்: ட்ரம்ப்
அமெரிக்கா கிரீன்லாந்தைக் கைப்பற்ற முயற்சிப்பதற்கு புதிய காரணம் ஒன்றைத் தெரிவித்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்.

அதிர்ச்சியளிக்கும் வகையில், அறிவாளியான நமது நேட்டோ கூட்டாளரான பிரித்தானியா, முக்கியமான அமெரிக்க ராணுவ தளம் அமைந்துள்ள சாகோஸ் தீவுக்கூட்டத்தில் ஒன்றான Diego Garcia தீவை மொரிஷியஸுக்கு கொடுக்க முடிவு செய்துள்ளது என்றும், அது மிகப்பெரிய முட்டாள்தனமான முடிவு என்றும் தனது சமூக ஊடகப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் ட்ரம்ப்.
( @realDonaldTrump - Truth Social Post )
— Donald J Trump Posts TruthSocial (@TruthTrumpPost) January 20, 2026
( Donald J. Trump - Jan 20 2026, 1:38 AM ET )
Shockingly, our “brilliant” NATO Ally, the United Kingdom, is currently planning to give away the Island of Diego Garcia, the site of a vital U.S. Military Base, to M… pic.twitter.com/tufWGCx2RG
மேலும், கிரீன்லாந்தை கையகப்படுத்த வேண்டியதற்கான, தேசிய பாதுகாப்பு காரணங்களின் மிக நீண்ட வரிசையில் பிரித்தானியாவின் இந்த நடவடிக்கையும் ஒன்றாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார் ட்ரம்ப்.
விடயம் என்னவென்றால், சாகோஸ் தீவுக்கூட்டத்தை மொரிஷியஸுக்கு கொடுக்கும் ஒப்பந்தம் பல மாதங்களுக்கு முன்பே செய்யப்பட்டுவிட்டது.
அத்துடன், அந்த ஒப்பந்தம் செய்யப்பட்ட நேரத்தில், இது ஒரு மிகப்பெரிய சாதனை என அமெரிக்க மாகாணங்கள் செயலரான மார்க்கோ ரூபியோ அதை புகழ்ந்து பாராட்டியதும், பின்னர் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு அந்த ஒப்பந்தம் தொடர்பில் ட்ரம்ப் தனது ஆதரவைத் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |