இஸ்ரேலுக்கான 4 பில்லியன் டொலர் ராணுவ உதவி நிறுத்தம்: டிரம்ப் அறிவிப்பு
Trump says US to end financial aid to Israel: இஸ்ரேலுக்கான அமெரிக்க ராணுவ உதவி இந்த ஆண்டு இறுதியுடன் நிறுத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கான உதவி நிறுத்தம்
இஸ்ரேலுக்கான அமெரிக்காவின் இராணுவ உதவிகளை நிறுத்திக் கொள்வது தொடர்பாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்தி இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய டொனால்ட் டிரம்ப், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் இஸ்ரேலுக்கு ஆண்டுக்கு 4 பில்லியன் டொலர் வழங்குவதாக ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் சில மாதங்களுக்கு முன்பு 4 பில்லியன் டொலர் வழங்குவதாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்தை நிறுத்தி கொள்வது தொடர்பாகவும் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளோம் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் இஸ்ரேலுக்கு உதவி தேவைப்பட்டால் அவர்களுக்கு மீண்டும் உதவுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இஸ்ரேல் பொருளாதார ரீதியில் முன்னேறி விட்டதால் தற்போது அவர்களுக்கு இந்த நிதியுதவி இனி தேவைப்படாது என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலின் நிலைப்பாடு
அமெரிக்காவின் நிதியுதவி படிப்படியாக குறைப்பது குறித்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஏற்கனவே கடந்த காலங்களில் பேசியுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினருக்கு எழுதிய கடிதத்தில், இஸ்ரேல் உதவி பெறும் நிலையில் இருந்து அமெரிக்காவின் கூட்டாளி நாடாக மாறும் நேரம் வந்துவிட்டதாக தெரிவித்து இருந்தார்.
அமெரிக்க நாடாளுமன்ற இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் இந்த தகவலானது வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.