அமெரிக்கா பயன்படுத்திய Discombobulator எனும் ரகசிய ஆயுதம்- ட்ரம்ப் வெளிப்படை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மீது நடத்தப்பட்ட ஜனவரி மாத தாக்குதலில், அமெரிக்க படைகள் ஒரு ரகசிய ஆயுதத்தை பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
அவர் இதனை Discombobulator என அழைத்துள்ளார்.
இந்த Discombobulator குறித்து பேசிய ட்ரம்ப், “இந்த சாதனம் வெனிசுலாவின் பாதுகாப்பு அமைப்புகளை செயலிழக்கச் செய்தது. ரஷ்யா மற்றும் சீனாவில் தயாரிக்கப்பட்ட ரொக்கெட்டுகள் எதுவும் இயங்கவில்லை. அவர்கள் பொத்தானை அழுத்தினாலும், எதுவும் வேலை செய்யவில்லை” என கூறியுள்ளார்.
இந்த தாக்குதலில், மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃப்ளோரஸ் கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அவர்கள் மீது போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
அமெரிக்க அதிகாரிகள், இந்த ஆயுதத்தின் தொழில்நுட்ப விவரங்களை உறுதிப்படுத்தவில்லை.
சில ஊடகங்கள், இது Directed-Energy அல்லது Electronic Warfare வகை தொழில்நுட்பமாக இருக்கலாம் எனக் கூறினாலும், அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
சுயாதீன ஆய்வாளர்கள், ட்ரம்ப் பல்வேறு தொழில்நுட்பங்களை ஒன்றாகக் கலந்துரைத்திருக்கலாம் என எச்சரிக்கின்றனர்.
Pentagon அதிகாரிகள், “சாதனங்களை செயலிழக்கச் செய்யும் non-kinetic systems குறித்து ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் ‘Discombobulator’ எனும் பெயரில் எந்த ஆயுதமும் அதிகாரப்பூர்வமாக இல்லை” என தெரிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கை, வெனிசுலா மற்றும் உலக நாடுகளில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காராகஸ் அரசு, “இது எங்கள் தேசிய சுயாட்சியை மீறிய செயல்” என கண்டனம் தெரிவித்துள்ளது.
ட்ரம்ப், வெனிசுலாவைத் தொடர்ந்து மத்திய அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் போதைப்பொருள் கும்பல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வைக்கப்பட்டுள்ள தங்கத்திற்கு பாதுகாப்பு இல்லை- மீட்க வலியுறுத்தும் ஜேர்மன் எம்.பி.க்கள்
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Trump Discombobulator weapon, US secret weapon Maduro raid, Venezuela Maduro raid Trump, Trump new weapon revelation, US electronic warfare system, Trump claims secret military tech, Venezuela US relations 2026, Trump directed energy weapon, Discombobulator weapon explained, Trump military technology news