அமெரிக்க பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் - வெனிசுலாவுடன் டிரம்ப் ஒப்பந்தம்
வெனிசுலா எண்ணெய் ஒப்பந்தம் மூலம் பெறும் பணத்தில் அமெரிக்க பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வெனிசுலாவை ஆக்கிரமித்த அமெரிக்கா
கடந்த ஜனவரி 3 ஆம் திகதி, வெனிசுலா தலைநகர் கரகஸ் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்க ராணுவம், வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை கைது செய்து அமெரிக்காவிற்கு நாடு கடத்தி சிறையில் அடைந்துள்ளது.

வெனிசுலாவை அமெரிக்கா ஆக்கிரமிப்பதன் நோக்கம், அங்குள்ள எண்ணெய் வளங்களுக்காக தான் என வெனிசுலா குற்றஞ்சாட்டியது.
அதேபோல், அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் வெனிசுலா சென்று எண்ணெய் வளங்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவித்தார்.

Credit: Reuters
மேலும், வெனிசுலாவில் இருந்து 50 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்களை வெனிசுலா இடைக்கால அரசு வழங்க உள்ளது.
அது சந்தையில் விலையில் விற்கப்பட்டு, அந்த பணம் என்னால் நிர்வகிக்கபடும். இந்த பணம் வெனிசுலா மற்றும் அமெரிக்காவின் நலன்களுக்கு பயன்படுத்தப்படும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பொருட்கள் மட்டுமே
இந்த சூழலில், எண்ணெய் ஒப்பந்தம் மூலம் வெனிசுலா பெறப்படும் பணத்தில், அமெரிக்காவில் தயாரிக்கப்படும் பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என வெனிசுலாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதில், அமெரிக்க விவசாய பொருட்கள், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட மருந்துகள், மருத்துவ சாதனங்கள் மற்றும் வெனிசுலாவின் மின்சார மற்றும் எரிசக்தி வசதிகளை மேம்படுத்துவதற்கான உபகரணங்கள் ஆகியவை அடங்கும்.
மேலும், வெனிசுலா அமெரிக்காவை அதன் முக்கிய வணிக கூட்டாளியாக தேர்வு செய்துள்ளது. இது ஒரு புத்திசாலித்தனமான தேர்வு, வெனிசுலா மக்களுக்கும் அமெரிக்காவிற்கும் மிகவும் நல்ல விடயம்" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |