அமெரிக்க தலைநகர் இப்போது எப்படி மாறியுள்ளது தெரியுமா? கவனம் ஈர்த்த டிரம்ப் பதிவு
வாஷிங்டன் நகரம் மிகவும் அழகானது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
வாஷிங்டன் மிகவும் அழகான நகரம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் தெரிவித்த கருத்தில், அமெரிக்க தலைநகர் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு மிகவும் அழகாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவருடைய சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் வெளியிட்ட பதிவில், தலைநகர் வாஷிங்டனை சுற்றி பார்த்த போது இது கடந்த ஆண்டை விட முழுவதுமாக மாறி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தெருக்கள் மிகவும் சுத்தமாக உள்ளன, கூடாரங்கள் எதுவும் இல்லை, பூங்காக்கள் மிகவும் அழகாகவும், புற்கள் சீர் செய்யப்பட்டும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
WASHINGTON D.C. IS BEAUTIFUL AND SAFE
— 🦅🇺🇸 Wade (@Straighthaulin4) September 20, 2025
Go Tour Washington and enjoy history being made! pic.twitter.com/mrlZaBeQ5t
மேலும் கூட்டங்களோ, கொலைகளோ இல்லை என்றும் டொனால்ட் டிரம்ப் விவரித்துள்ளார்.
இறுதியாக தற்போது வாஷிங்டன் “அழகாகவும், பாதுகாப்பாகவும்” இருப்பதாகவும், இது இப்படியே தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |