அமெரிக்கா இல்லையென்றால் நேட்டோ ஒரு காகிதப் புலி! டிரம்ப் கருத்தால் பரபரப்பு
நேட்டோ நாடுகள் கோழை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்து இருப்பது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேட்டோ நாடுகள் கோழை
ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகளின் ராணுவ நடவடிக்கைகளுக்கு உதவிக்கரம் நீட்டாத நேட்டோ கூட்டாளி நாடுகளை “கோழைகள்” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விமர்சித்துள்ளார்.

ட்ரூத் சோஷியல் பக்கத்தில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள கருத்தில், அமெரிக்கா இல்லாமல் நேட்டோ ஒரு காகிதப் புலி என்று விமர்சித்துள்ளார்.
மேலும் ஈரான் அணுசக்தியுடன் செயல்படும் போது அவர்களுடன் போரிட நேட்டோ விரும்பவில்லை. ஆனால் ஈரானை இராணுவ ரீதியாக அமெரிக்கா வென்ற பிறகு, குறைந்த ஆபத்துடன் தற்போது அவர்கள் அதிக விலைக்கு எண்ணெய் வாங்க ஈரானால் நிர்பந்திக்கப்படுவதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
ஆனால் எண்ணெய் விலை உயர்வு முக்கிய காரணமாக இருந்த ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்ட போது அதை திறக்க நேட்டோ நாடுகள் முன்வரவில்லை.

தற்போது குறைந்த ஆபத்து நிலைமைக்கு மாறிய பிறகு, இதை அவர்கள் செய்வது எளிமையானது. நேட்டோ நாடுகள் கோழைகள், நாங்கள் இதை நினைத்து வைத்துக் கொள்வோம் என்று டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க நேட்டோ நாடுகள் தங்கள் நாட்டின் போர்க்கப்பல்களை இப்பகுதிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று டிரம்ப் அழைப்பு விடுத்த போது நேட்டோ நாடுகள் ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையில் இறங்க மறுத்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |