டொனால்டு ட்ரம்பின் ஆட்சி முடிவில் அமெரிக்காவில் ஜனநாயகம் என்பதே இருக்காது: AI கணிப்பு
அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் டொனால்டு ட்ரம்ப் பொறுப்புக்கு வரவிருக்கும் நிலையில், அவரது நிர்வாகம் எப்படி அமையும் என்பது தொடர்பில் AI கணித்துள்ளது.
பணவீக்கத்தை அதிகரிக்கும்
ஜனவரி 20ம் திகதி டொனால்டு ட்ரம்ப் அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக பொறுப்புக்கு வரவிருக்கிறார். 78 வயதான ட்ரம்ப், தேர்தல் பரப்புரையின் போது படுகொலை முயற்சியில் இருந்து தப்பியதை அடுத்து, அமெரிக்க வாக்காளர்கள் ட்ரம்ப் ஆதரவு நிலையை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
மட்டுமின்றி, அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் வரி விதிக்கும் அவரது முடிவு பணவீக்கத்தை அதிகரிக்கும், சீனாவுடன் வர்த்தகப் போரை ஏற்படுத்தும், இது பொருளாதார வளர்ச்சியை மெதுவாக்கும் என்றும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஆனால், அமெரிக்காவில் உள்ள மில்லியன் கணக்கான புலம்பெயர் மக்களை வெளியேற்றுவதனால் அமெரிக்க மக்களுக்கு அதிக வேலை வாய்ப்பு உருவாகும் என்றே ட்ரம்ப் கூறி வருகிறார்.
குறைவான பணியாளர்கள் காரணமாக ஏற்படும் அதிக ஊதியத்தால் உணவு செலவுகள் அதிகரிக்கக்கூடும் என்று சில நிபுணர்கள் கூறுகிறார்கள். அத்துடன், ட்ரம்ப் ஆட்சி காலத்தில் அமெரிக்காவை சில குறிப்பிட்ட தொழில்நுட்ப பெரும் முதலாளிகள் நிர்வகிப்பார்கள் என்ற கவலையை ஜனாதிபதி ஜோ பைடனும் பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் ட்ரம்பின் மிக நெருக்கமான, உலகின் பெரும் கோடீஸ்வரர் எலோன் மஸ்க் அறிமுகம் செய்துள்ள Grok என்ற AI தொழில்நுட்பத்திடம் டொனால்டு ட்ரம்பின் ஆட்சி தொடர்பில் கருத்து கேட்கப்பட்டுள்ளது.
Grok என்ற AI தொழில்நுட்பத்தின் கணிப்பு என்னவென்றால், டொனால்டு ட்ரம்பின் ஆட்சி முடிவில், அமெரிக்காவில் ஜனநாயகம் என்பதே இருக்காது என அம்பலப்படுத்தியுள்ளது.
2029 ஆம் ஆண்டிற்குள் அமெரிக்க அரசாங்கத்தில் பெரும் கோடீஸ்வரர்களே ஆதிக்கம் செலுத்துவார்கள். பெரும் நிறுவனங்களுக்கு ஆதரவான கொள்கைகளை நோக்கி ஒரு வெளிப்படையான மாற்றம் இருக்கலாம்.
தனிமைப்படுத்தப்படும்
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 10 சதவிகித வரியும், சீனப் பொருட்களுக்கு 60 சதவிகித வரியும் விதிக்கப்படலாம். பணவீக்கம் முந்தைய பத்தாண்டுகளை விட கணிசமாக அதிகமாக இருக்கலாம்.
மட்டுமின்றி, உலகளாவிய வர்த்தகங்களின் அடிப்படையில் அமெரிக்கா பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்தப்படும் நெருக்கடியை எதிர்கொள்ளலாம். விலைவாசி உயர்வு காரணமாக பல அமெரிக்கர்கள் தங்கள் வாழ்க்கைத் தரம் குறைந்துவிட்டதாக உணர வழிவகுக்கும்.
குடியேற்றம், இனம் மற்றும் பொருளாதாரக் கொள்கை பற்றிய விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், அரசியல் மற்றும் சமூக சூழல் மேலும் பிளவுபடக்கூடும்.
குறிப்பாக பொருளாதாரக் கொள்கைகள் அல்லது குடியேற்ற நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, சமூக செயல்பாடுகள் அல்லது போராட்டங்கள் அதிகரிக்கலாம் என்றே Grok பதிலளித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |