மத்திய கிழக்கில் இருந்து..ஆயிரக்கணக்கான பிரித்தானியர்களை மீட்கும் ட்ரம்பின் இரகசிய திட்டம்
ஈரான் மீது தரைவழிப் படையெடுப்பைத் தொடங்கினால், ஆயிரக்கணக்கான பிரித்தானியர்களை மீட்கும் இரகசிய திட்டத்தை ட்ரம்ப் தீட்டி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.
இரகசியத் திட்டம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தரைவழிப் படையெடுப்பைத் தொடங்கினால், மத்திய கிழக்கில் இருந்து ஆயிரக்கணக்கான பிரித்தானியர்களை மீட்கும் இரகசியத் திட்டம் தீட்டப்பட்டு வருவதாக, மூத்த இராணுவ வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன.
கமாண்டோ தாக்குதல் படகுகள், கடற்கரைகள் மற்றும் துறைமுகங்களில் இருந்து பிரித்தானியர்களை மீட்டும் தயார் நிலையில், கிழக்கு மத்தியதரைக் கடலுக்கு இரகசியமாக மாற்றப்பட்டுள்ளதாக 'தி மெயில் ஆன் சண்டே' பத்திரிகைக்கு தெரிவிக்கப்பட்டது.
மேலும், ராயல் மரைன்ஸ் படையினர் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள விமானம் மூலம் அனுப்பப்பட தயாராக உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
அதேபோல், இந்த நடவடிக்கைகள் பிரித்தானியாவைச் சேர்ந்த சுமார் 4,500 பேர் இருப்பதாக கூறப்படும் லெபனானின் பெய்ரூட்டை மையமாகக் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
6000 பிரித்தானிய குடிமக்கள்
ஆனால், சுமார் 6000 பிரித்தானிய குடிமக்கள் வசிப்பதாக கூறப்படும், ஜோர்டானின் அகாபாவில் இதேபோன்ற ஒரு நடவடிக்கையை நடத்துவதற்கான மாற்றுத் திட்டங்களும் உள்ளன.
தற்போது ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் நீரினையைக் கைப்பற்றுவதற்காக, அமெரிக்கா தரைவழித் தலையீட்டைத் தொடங்குவிருப்பது தெளிவாக தெரித்தால், தேசிய வெளியேற்ற நடவடிக்கை என்று அழைக்கப்படும் இந்த நடவடிக்கை தொடங்கப்படும் என்று இராணுவ வட்டாரங்கள் வலியுறுத்தியுள்ளன.
ஹிஸ்புல்லவிற்கு எதிராக இஸ்ரேலியர்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டால், பிரித்தானிய படைகள் பெய்ரூட்டில் இருந்து மீட்பு முயற்சிகளை மேற்கொள்ளாது என்ற சிக்கலும் உள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |