உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை: உக்ரைனுக்கு அழைப்பில்லையாம்
உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்க உக்ரைனுக்கு அழைப்பில்லை என ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை
தான் அமெரிக்க ஜனாதிபதியானதும் உக்ரைன் போரை நிறுத்துவதாக உறுதியளித்திருந்தார் ட்ரம்ப்.
அவர் சொன்னதுபோலவே போர் நிறுத்தம் தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் நடக்கும் Ukraine peace mission இன்று துவங்க உள்ளன.
அதற்காக, அமெரிக்க மாகாணங்கள் செயலரான மார்க்கோ ரூபியோ (Marco Rubio) இன்று சவுதி அரேபியா சென்றுள்ளார்.
ரஷ்ய தரப்பில், ரஷ்ய வெளியுறவு அமைச்சரான செர்கே லாவ்ரோவும், வெளியுறவுக் கொள்கை ஆலோசகரான யூரி உஷாக்கோவ் என்பவரும் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க இருக்கிறார்கள்.
உக்ரைனுக்கு அழைப்பில்லையாம்
ஆனால், உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க உக்ரைனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என செய்திகள் கூறுகின்றன.
விடயம் என்னவென்றால், உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கியும் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளார்.
ஆனால், ரஷ்ய அதிகாரிகளையோ, அமெரிக்க அதிகாரிகளையோ சந்திக்கும் திட்டம் எதுவும் தன்னிடம் இல்லை என ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மேலும், சவுதியில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க உக்ரைனுக்கு அழைப்பு விடுக்கப்படும் என தான் நம்பவில்லை என்றும் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அத்துடன், உக்ரைன் பங்கேற்காமல் எடுக்கப்படும் அமைதி ஒப்பந்தம் எதையும் உக்ரைன் ஏற்றுக்கொள்ளாது என்பதையும் உறுதிபடத் தெரிவித்துள்ளார் ஜெலன்ஸ்கி.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |