போலந்திற்கு கூடுதல் படைகளை அனுப்பிய டிரம்ப்: குழப்பத்தில் நேட்டோ நாடுகள்
நேட்டோ நாடான போலந்திற்கு அமெரிக்க ஜனாதிபதி கூடுதல் துருப்புகளை அனுப்பி வைத்துள்ளார்.
துருப்புகளை திரும்ப பெற்ற டிரம்ப்
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா முன்னெடுத்து வரும் இராணுவ நடவடிக்கைக்கு ஜேர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகள் போதிய ஆதரவு வழங்காததை அடுத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

மேலும் ஐரோப்பாவிலிருந்து 4000 முதல் 5000 வீரர்களை திரும்ப பெற போவதாகவும் டிரம்ப் அறிவித்து இருந்தார்.
இதனை தொடர்ந்து, அமெரிக்காவின் இந்த நடவடிக்கை நேட்டோவின் ஒற்றுமையை எந்த விதத்திலும் பாதிக்காது என்று நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே தெரிவித்தார்.
போலந்திற்கு துருப்புகளை அனுப்பிய டிரம்ப்
இந்நிலையில் நேட்டோ உறுப்பு நாடான போலந்திற்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூடுதல் துருப்புகளை அனுப்பி வைத்து இருப்பது நேட்டோ உறுப்பினர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அமெரிக்காவின் நோக்கம் தொடர்பான நிச்சயமற்ற நிலைக்கு நேட்டோ கூட்டாளிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
நேட்டோ உறுப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஸ்வீடனில் சந்திப்பை ஒன்றை நடத்தி தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்காவுடனான பிளவுகள் அப்படியே நீடிப்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |