இரண்டு ஆசிய நாடுகளுக்கு கடிதம் அனுப்பிய ட்ரம்ப்... 25 சதவீதம் வரி விதிப்பு
ஆசியாவில் இரண்டு முக்கியமான அமெரிக்க நட்பு நாடுகளுடனான தொடர்ச்சியான வர்த்தக ஏற்றத்தாழ்வுகளைக் காரணம் காட்டி, 25 சதவீத வரியை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ளார்.
பழிவாங்கக்கூடாது
அமெரிக்க நட்பு நாடுகளான ஜப்பான் மற்றும் தென் கொரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கே 25 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வரிகள் குறித்த அறிவிப்பை ட்ரம்ப், இரு நாடுகளின் தலைவர்களுக்கும் அனுப்பிய கடிதங்களுடன் தமது ட்ரூத் சோஷியலில் பதிவேற்றியுள்ளார்.
மட்டுமின்றி, இரு நாடுகளும் தங்கள் சொந்த இறக்குமதி வரிகளை அதிகரிப்பதன் மூலம் பழிவாங்கக்கூடாது, இல்லையெனில் ட்ரம்ப் நிர்வாகம் வரிகளை மேலும் அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஜப்பான் மீது 24% மற்றும் தென் கொரியா மீது 25% உட்பட டசின் கணக்கான நாடுகள் மீது வரி விகிதங்களை அறிவித்ததன் மூலம் ட்ரம்ப் ஆரம்பத்தில் நிதிச் சந்தைகளில் பரபரப்பை ஏற்படுத்தினார்.
வரி வருவாயை
இதனையடுத்து, ட்ரம்ப் 90 நாள் பேச்சுவார்த்தை காலத்தை அறிவித்தார், இதன் போது பெரும்பாலான நாடுகளின் பொருட்களுக்கு அடிப்படை 10% வரி விதிக்கப்பட்டது.
இதனிடையே, ஜூலை 4 அன்று சட்டமாக கையெழுத்திட்ட வரி குறைப்புகளை ஈடுசெய்ய ட்ரம்ப் இறக்குமதி வரி வருவாயை நம்பியுள்ளார். வெளியான தரவுகளின் அடிப்படையில், 2024 ஆம் ஆண்டில் ஜப்பானுடன் 69.4 பில்லியன் டொலர் வர்த்தக பற்றாக்குறையும், தென் கொரியாவுடன் 66 பில்லியன் டொலர் வர்த்தகப்பற்றாக்குறையும் அமெரிக்கா பதிவு செய்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |