பிரித்தானிய பிரதமருக்கு தலைக்குனிவை ஏற்படுத்தும் ட்ரம்பின் அதிரடி நடவடிக்கை
சர் கெய்ர் ஸ்டார்மர் பிரித்தானிய பிரதமராக பதவியேற்றதும், முதல் வேலையாக, புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு நாடுகடத்தும் திட்டத்தை ரத்து செய்தார்.
ஆனால், அந்த திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டுள்ளார்.
ட்ரம்ப் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை
பிரித்தானியாவின் முந்தைய கன்சர்வேட்டிவ் அரசு புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு நாடுகடத்தும் திட்டத்துக்காக சுமார் 700 மில்லியன் பவுண்டுகள் செலவிட்டது.
ஆனால், கன்சர்வேட்டிவ் கட்சி 700 மில்லியன் பவுண்டுகளை வீணாக்கிவிட்டது, வெறும் நான்கு புகலிடக்கோரிக்கையாளர்கள் மட்டுமே தாமாக முன்வந்து ருவாண்டாவுக்குச் சென்றுள்ளார்கள் என லேபர் அரசு விமர்சனம் முன்வைத்ததுடன், பிரதமர் ஸ்டார்மர் அந்த திட்டத்தையே ரத்தும் செய்து விட்டார்.
ஆனால், எந்த திட்டத்தை வேலைக்கு ஆகாத திட்டம் என ஸ்டார்மர் ஒதுக்கினாரோ, அதே திட்டத்தை ட்ரம்ப் பயன்படுத்திக்கொண்டுள்ளார்.
ஆம், புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை ருவாண்டாவுக்கு நாடுகடத்தும் திட்டம் ஒன்றில் ருவாண்டாவுடன் கையெழுத்திட்டுள்ளார் ட்ரம்ப்.
அவ்வகையில், சுமார் 250 புகலிடக்கோரிக்கையாளர்கள் அமெரிக்காவிலிருந்து ருவாண்டாவுக்கு அனுப்பப்பட உள்ளார்கள்.
அதுவும், பிரித்தானிய மக்களின் வரிப்பணத்தில் புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்க ஏற்பாடு செய்யப்பட்ட ஹொட்டல்களில், தற்போது அமெரிக்காவிலிருந்து ருவாண்டாவுக்கு நாடுகடத்தப்படும் புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்கவைக்கப்பட உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |