கனடா, வெனிசுலா, கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைத்த டிரம்ப்: சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தன்னுடைய சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிரம்ப் பகிர்ந்த AI புகைப்படம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை தன்னுடைய சமூக ஊடகத் தளமான ட்ரூத் சோஷியல்(Truth Social) பக்கத்தில் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள அந்த புகைப்படத்தில், கனடா, கிரீன்லாந்து மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளை அமெரிக்க எல்லைக்கு உட்பட்ட பகுதிகளாக சித்தரிக்கப்பட்டிருந்தது.

இந்த புகைப்படம் உக்ரைன் - ரஷ்யா மோதல் தொடர்பாக அமெரிக்க வெள்ளை மாளிகையில் 2025ம் ஆண்டு நடைபெற்ற உலக தலைவர்கள் உச்சி மாநாட்டின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தின் மாற்றியமைக்கப்பட்ட வடிவம் என்று தெரியவந்துள்ளது.

இதில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உட்பட பல நாடுகளின் முக்கிய தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
அவர்களில் முக்கியமாக பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இத்தாலிய பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |