டொனால்டு ட்ரம்ப் தாக்குதல்தாரிக்கு உக்ரைன் தொடர்பு: முடிச்சுப்போடும் ரஷ்யா
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் மீதான படுகொலை முயற்சிக்கு உக்ரைன் தொடர்பிருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
நெருப்புடன் விளையாடுவதால்
குறித்த தாக்குதல் சம்பவமானது நெருப்புடன் விளையாடுவதால் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை சுட்டிக்காட்டுவதாக ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.
டொனால்டு ட்ரம்பை கொல்ல முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது என FBI அறிவித்துள்ளது தொடர்பில் கேள்வி எழுப்பியதை அடுத்து, ரஷ்ய ஜனாதிபதி மாளிகையின் செய்தித்தொடர்பாளர் Dmitry Peskov தெரிவிக்கையில்,
நாங்கள் என்ன நினைக்கிறோம் என்பதல்ல, அமெரிக்க உளவுத்துறை என்ன நினைக்கிறது என்பது தான் முதன்மையானது. நெருப்புடன் விளையாடினால் விளைவுகள் ஏற்படுவது உறுதி என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா உக்ரைனுக்கு ஆதரவளிப்பதையே, நெருப்புடன் விளையாடினால் விளைவுகள் உறுதி என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் வீரர்களை
இந்த நிலையில், ட்ரம்ப் தொடர்பில் கைதான அந்த நபர் 58 வயதான Ryan Wesley Routh என அடையாளம் காணப்பட்டுள்ளது. மட்டுமின்றி, அவர் தீவிரமான உக்ரைன் ஆதரவாளர் என்றும் கூறப்படுகிறது.
2023ல் உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள தன்னார்வலர்கள் தொடர்பில் வெளியான கட்டுரை ஒன்றில், இவரும் இடம் பெற்றுள்ளார். 2022ல் உக்ரைனுக்கு புறப்பட்ட Ryan Wesley Routh பல மாதங்கள் அங்கேயே தங்கியிருந்து உதவியுள்ளார்.
அத்துடன் தலிபான்களிடம் இருந்து தப்பியோடிய ஆப்கானிஸ்தான் வீரர்களை உக்ரைனில் போரிடுவதற்காக நியமிக்க முயற்சி மேற்கொண்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |