ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும்: போர் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாக டிரம்ப் அறிவிப்பு
ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் விரைவில் வெளியேறும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் போர்
அணுசக்தி திட்டத்திற்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் ஈரான் மீது போர் தாக்குதலை தொடங்கி நடத்தி வருகிறது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இந்த இராணுவ நடவடிக்கையில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்டார்.
மேலும் ஈரானின் பல்வேறு உள்கட்டமைப்புகள் மீதும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தி பெரிய அளவிலான சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

ஈரானில் இருந்து வெளியேறுகிறோம்
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானில் இருந்து விரைவில் அமெரிக்க படைகள் வெளியேறும் என்று தெரிவித்துள்ளார்.
ஈரான் மீதான இராணுவ நடவடிக்கை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ள டிரம்ப், அதே சமயம் அமெரிக்க படைகள் உடனடியாக வெளியேறாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.
போர் முடிவு தொடர்பான இறுதி நாளை டிரம்ப் அறிவிக்காவிட்டாலும், ஈரானின் உள்கட்டமைப்புகள் மீது தற்போது வரை அமெரிக்க படைகள் ஏற்படுத்திய சேதங்களை சரி செய்ய அந்நாட்டிற்கு குறைந்தது 10 ஆண்டுகள் வரை ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |