ரஷ்யா மீதான பொருளாதாரத் தடை மசோதா: சட்டமாக்கிய ட்ரம்ப்..வெளியான செய்தி
Trump signs sanctions bill against russia: ரஷ்யாவின் மீது விரிவான பொருளாதாரத் தடைகளை விதிக்கும் மசோதாவில் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரஷ்யாவின் மீது விரிவான பொருளாதாரத் தடைகளை விதிக்கும் மசோதாவில் கையெழுத்திட்டதாக தெரிவித்துள்ளது.
பொருளாதார அழுத்தத்தை ஏற்படுத்த
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு விவகாரத்தில், பொருளாதார அழுத்தத்தை ஏற்படுத்த ட்ரம்பின் அமெரிக்கா முடிவு செய்தது.
அத்துடன் ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு மீதான சார்பை குறைத்துக் கொள்ளவில்லை என்றால், முன்னெப்போதும் இல்லாத பொருளாதாரத் தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும் ட்ரம்பின் நிர்வாகம், இந்தியா மற்றும் சீனாவிற்கு நேரடியான மிரட்டலை விடுத்தது.
அதனைத் தொடர்ந்து இந்தியா, சீனா மற்றும் பிற நாடுகள் ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவை சார்ந்திருப்பதைக் குறைக்கும் வகையில், அந்நாடுகள் மீது 100 சதவீதம் இறக்குமதி வரிகளை விதிக்கவும் மற்றும் ஈரான் மீதான தடைகளை நீட்டிக்கவும் அதிகாரம் அளிக்கும் சட்ட மசோதாவை ட்ரம்ப் அரசு கொண்டு வந்தது.
ரஷ்யா மற்றும் ஈரான் மீதான தடைகள்
இந்த நிலையில், குறித்த மசோதாவில் வெள்ளிக்கிழமை அன்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டு, அதனை சட்டமாக்கினார் என்று வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம், "ரஷ்யா மற்றும் ஈரான் மீதான தடைகள் விதிக்கும் 2026ஆம் ஆண்டின் சட்டம்" என்று அழைக்கப்படும் இந்த மசோதா புதன்கிழமையன்று பிரதிநிதிகள் சபையிலும், கடந்த மாதம் செனட் சபையிலும் நிறைவேற்றப்பட்டது.