உங்கள் நாட்டை முதலில் சரி செய்யுங்கள்- ஜேர்மன் சேன்சலரை கடுமையாக விமர்சித்த ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், ஜேர்மன் சேன்சலர் ஃப்ரெட்ரிக் மெர்ஸ் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
வியாழக்கிழமை, வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிர்வாக உத்தரவு கையொப்ப நிகழவில் பேசிய அவர், "ஜேர்மன் சேன்சலர் மிகவும் மோசமான பணியை செய்து வருகிறார்.
அவருக்கு குடியேற்றம், எரிசக்தி மற்றும் உக்ரைன் பிரச்சினைகள் உள்ளன. ஆனால் அவர் ஈரான் விவகாரத்தில் தலையிடுகிறார்” என்று குற்றம் சாட்டினார்.
மேலும் பேசிய ட்ரம்ப், “ஈரானுக்கு அணு ஆயுதம் வேண்டுமா என்று நான் கேட்டேன். அவர் ‘இல்லை’ என்றார். அப்படியானால் நான் சரியாகதான் இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.

Truth Social-ல் வெளியிட்ட பதிவில், மெர்ஸ் தனது நாட்டின் பிரச்சினைகளை சரி செய்யாமல், ஈரான் அணு ஆயுதத்தை தடுக்க முயற்சிக்கும் நாடுகளின் பணியில் தலையிடுவதாகவும் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் குறிப்பிட்டதாவது, “ஜேர்மன் சேன்சலர், ரஷ்யா-உக்ரைன் போரைக் களைவதில் கவனம் செலுத்த வேண்டும். குடியேற்றம் மற்றும் எரிசக்தி பிரச்சினைகளை சரி செய்ய வேண்டும். உலகத்தை பாதுகாப்பாக மாற்றும் முயற்சிகளில் தலையிடாமல் இருக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையில், ஜேர்மனியில் அமெரிக்க படைகளை குறைப்பது குறித்து ட்ரம்ப் எடுத்துரைத்த கருத்து, பெண்டகனில் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கருத்துகள், அமெரிக்கா-ஜேர்மனி உறவுகளில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |