வெள்ளை மாளிகையில் நடந்த டிரம்ப் மகனின் நிச்சயதார்த்தம்: இணையத்தில் வைரலாகும் வீடியோ
வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மகன் நிச்சயதார்த்தம் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
மனைவியுடன் விவாகரத்து
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் முதல் மகனான டொனால்ட் டிரம்ப் ஜூனியரின் நிச்சயதார்த்தம் வெள்ளை மாளிகையில் வைத்து நடைபெற்றது.
டிரம்பின் முதல் மனைவி இவானா டிரம்புக்கு பிறந்த டொனால்ட் டிரம்ப் ஜூனியர் தொழிலதிபராகவும், தொலைக்காட்சி பிரபலமாகவும் இருந்து வருகிறார்.

டிரம்ப்-இவானா தம்பதிக்கு மூத்த மகனாக பிறந்த இவருக்கு கடந்த 2005ம் ஆண்டு வனேஸ்ஸா என்ற மாடலை திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் இருவருக்கும் 5 குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த 2018ம் ஆண்டு விவாகரத்து செய்வதாக அறிவித்தனர்.
வெள்ளை மாளிகையில் நிச்சயதார்த்தம்
விவாகரத்துக்கு பிறகு டொனால்ட் டிரம்ப் ஜூனியர் கடந்த ஆண்டு முதல் பெட்டினா ஆண்டர்சன் என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
BREAKING NEWS:
— Laura Loomer (@LauraLoomer) December 16, 2025
President Trump just announced at the White House that his son @DonaldJTrumpJr and his girlfriend Bettina Anderson are getting married! They just got engaged.
Congratulations to them both. pic.twitter.com/psb38nTGla
இந்நிலையில் இருவருக்கும் இடையிலான திருமண நிச்சயதார்த்தம் வெள்ளை மாளிகையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்தம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |