உக்ரைன் ஜனாதிபதியுடன் பேசிய ட்ரம்ப்: போர் குறித்து ஜெலன்ஸ்கி என்ன கூறியுள்ளார்?
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், தான் உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கியுடன் தொலைபேசி வாயிலாக பேசியதாக தெரிவித்துள்ளார்.
ஜெலன்ஸ்கி என்ன கூறினார்?
தான் பதவியேற்றதுமே ரஷ்ய உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதாகத் தெரிவித்திருந்தார் ட்ரம்ப்.
தற்போது அவர் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி புடினுடனும், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியுடனும் பேசிவருகிறார்.
தான் ஜெலன்ஸ்கியுடன் பேசியது குறித்து பேசிய ட்ரம்ப், உக்ரைன் ஜனாதிபதி சமாதானத்தை விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
நான் இப்போதுதான் உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கியுடன் பேசினேன். புடினைப்போலவே ஜெலன்ஸ்கியும் சமாதானத்தைத்தான் விரும்புகிறார் என்று கூறியுள்ளார் ட்ரம்ப்.
I had a meaningful conversation with @POTUS. We long talked about opportunities to achieve peace, discussed our readiness to work together at the team level, and Ukraine’s technological capabilities—including drones and other advanced industries. I am grateful to President Trump… pic.twitter.com/2SIOTX3jEp
— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) February 12, 2025
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |