புடினுடன் பேசி விட்டேன்... உக்ரைன் போர் தொடர்பில் ஜனாதிபதி ட்ரம்ப் புதிய தகவல்
உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து விவாதிக்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் தொலைபேசியில் விவாதித்ததாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
புடின் விரும்பவில்லை
அமெரிக்க ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ விமானமான ஏர் ஃபோர்ஸ் ஒன்னில் ஒரு நேர்காணலின் போது தெரிவித்த ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதியுடன் சமீப நாட்களில் எத்தனை முறை பேசினேன் என்பதை வெளியே சொல்லாமல் இருப்பதே நலது என்றார்.
ஆனால், மக்கள் நாளும் கொல்லப்படுவதை புடின் விரும்பவில்லை என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் ட்ரம்ப் - புடின் தொலைபேசி உரையாடல் தொடர்பில் வெள்ளை மாளிகையும், ரஷ்ய ஜனாதிபதி மாளிகையும் உறுதி செய்யவில்லை என்றே கூறப்படுகிறது.
ஜனவரி மாத இறுதியில், ரஷ்ய ஜனாதிபதி மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் தெரிவிக்கையில், ட்ரம்புடன் தொலைபேசி உரையாடலை மேற்கொள்ள புடின் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.
மட்டுமின்றி இது தொடர்பில் வெள்ளை மாளிகையில் பதிலுக்காக காத்திருப்பதாகவும் கூறியிருந்தார். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவிக்கையில், ரஷ்யா உடனான போரின் முடிவு குறித்து விவாதிக்க அவர் அடுத்த வாரம் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்திக்க இருப்பதாக குறிப்பிட்டார்.
ஆனால், உக்ரைன் ஜனாதிபதி வாஷிங்டன் வருகிறாரா அல்லது தொலைபேசி உரையாடலா என்பது குறித்து ட்ரம்ப் விளக்கமளிக்கவில்லை. தாம் உக்ரைனுக்கு தற்போது செல்லவில்லை என்பதை மட்டும் அவர் அப்போது உறுதி செய்திருந்தார்.
உறுதியான திட்டம்
உக்ரைன் மீதான முழு அளவிலான ரஷ்யாவின் படையெடுப்புடன் தொடங்கிய இந்தப் போர், பிப்ரவரி 24 அன்று அதன் மூன்றாம் ஆண்டை நிறைவு செய்யும். ஆயிரக்கணக்கான மக்கள், பெரும்பாலும் உக்ரேனியர்கள் இந்தப் போரினால் கொல்லப்பட்டுள்ளனர்.
டொனால்டு ட்ரம்ப் தமது தேர்தல் பரப்புரையின் போதே, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கபப்டும் என கூறி வந்துள்ளார். புடினுடன் தமக்கு நல்ல உறுவு இருப்பதாகவும், போரை முடிவுக்கு கொண்டுவர தம்மிடம் உறுதியான திட்டம் இருப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
ஆனால் அந்த திட்டம் என்ன என்பது குறித்து அவர் இதுவரை விளக்கவில்லை. மிக விரைல் போர் முடிவுக்கு வரும் என குறிப்பிட்டுள்ள டொனால்டு ட்ரம்ப், நாளும் மக்கள் கொல்லப்படுகிறார்கள், உக்ரைனுக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்திவிட்டது, இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவருவேன் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |