உங்கள் ஆங்கில உச்சரிப்பு புரியவில்லை! மோடி-டிரம்ப் சந்திப்பில் உருவான சங்கடமான தருணம்
இந்திய பத்திரிக்கையாளர்களின் ஆங்கில உச்சரிப்பு புரியவில்லை என்று டொனால்ட் டிரம்ப் கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மோடி - டிரம்ப் சந்திப்பு
அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த சந்திப்பில் F-35 போர் விமானங்கள் முதல் 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளி தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த சந்திப்பில் 2030ஆம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை 500 பில்லியன் டொலராக உயர்த்த கூட்டாக இலக்கு நிர்ணயித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
இந்திய பத்திரிக்கையாளருடன் டிரம்பின் சங்கடமான தருணம்
இரு தரப்பு பேச்சுவார்த்தையை தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்திய பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கலந்து கொண்டனர்.
Trump struggles to understand Indian journalist’s accent—awkward moment goes viral
— NEXTA (@nexta_tv) February 14, 2025
Meanwhile, Modi’s visit to the U.S.—where he secured major energy and defense deals—has been a massive blow to Moscow.
🔹 Trump is quietly taking over one of Russia’s largest export markets and… pic.twitter.com/Ulcl7omFkN
அப்போது இந்தியாவை சேர்ந்த பத்திரிக்கையாளர்களின் கேள்விகளை புரிந்து கொள்ள கஷ்டப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், பத்திரிக்கையாளரின் ஆங்கில உச்சரிப்பு புரியவில்லை என்று கூறி மற்றொரு பத்திரிக்கையாளரின் கேள்விக்கு பதிலளிக்க திரும்பினார்.
இந்நிலையில், இந்திய பத்திரிக்கையாளர்களின் ஆங்கில உச்சரிப்பு புரியவில்லை என்று டொனால்ட் டிரம்ப் கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |