அது கனடாவின் பொருளாதாரத்தை முற்றிலும் கொன்றுவிடும்! ட்ரூடோவின் கூற்றுக்கு ட்ரம்ப் கூறியதென்ன?
அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் உடனான அமர்வில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உரையாடிய விடயங்கள் குறித்து தெரிய வந்துள்ளது.
கடுமையான வரி
டொனால்ட் ட்ரம்ப் கனடா உட்பட மூன்று நாடுகளுக்கு கடுமையான வரி விதிக்கப்படும் என்று எச்சரித்ததைத் தொடர்ந்து, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அமெரிக்காவுக்கு பயணித்து அவரை சந்தித்தார்.
இருவரும் விருந்து உண்டதைத் தொடர்ந்து ட்ரம்ப் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ட்ரூடோ பகிர்ந்தார்.
இந்நிலையில் தலைவர்கள் தங்கள் அமர்வில் உரையாடியது குறித்து Foxயின் வட்டாரங்கள் கூறியுள்ளன.
ஜஸ்டின் ட்ரூடோ, 'கனடா மீதான வரி நாட்டின் பொருளாதாரத்தை முற்றிலுமாக கொன்றுவிடும் என்பதால், 25 சதவீத வரியை ஏற்க முடியாது' என்றார்.
அதற்கு பதிலளித்த ட்ரம்ப், உங்கள் நாடு 100 பில்லியன் டொலர் அளவிற்கு அமெரிக்காவை ripping off செய்தாலொழிய பிழைக்க முடியாதா? என கேள்வி எழுப்பியிருக்கிறார்.
ட்ரூடோ ஆளுநர்
மேலும், கனடாவை 51வது மாகாணமாக மாற்றுமாறு பரிந்துரைத்த ட்ரம்ப், அதற்கு ஆளுநராக உங்களை நியமிக்கலாம் என்றும் ஜஸ்டின் ட்ரூடோவிடம் கூற இருவரும் சிரித்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது.
அமர்வில் இருந்த ஒருவர் கனடா உண்மையிலேயே தாராளவாத நாடாக இருக்கும் என்று பரிந்துரைத்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.
அதேவேளையில் குடியேற்ற அமலாக்கம் குறித்து ட்ரூடோவுக்கு ஒரு தீவிரமான செய்தியை ட்ரம்ப் கொடுத்ததாகவும் தெரிகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |