பாஸ்தீன மக்கள் அங்கிருந்து வெளியேறுங்கள்... ட்ரம்ப் அதிரடி உத்தரவு
காஸா முழுவதையும் சுத்தம் செய்வதற்காக பாலஸ்தீனியர்கள் மொத்தமாக காஸாவை விட்டு வெளியேற வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பரிந்துரைத்துள்ளார்.
இடம்பெயர வேண்டும்
ஜோ பைடன் நிர்வாகத்தால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 2,000 பவுண்டு குண்டுகளை இஸ்ரேலுக்கு அனுப்ப அமெரிக்க இராணுவத்திற்கு உத்தரவிட்ட நிலையிலேயே பாலஸ்தீன மக்களுக்கு வெளியேறும் கோரிக்கை வைத்துள்ளார்.
காஸா குடியிருப்பாளர்கள் அண்டை நாடுகளுக்கு இடம்பெயர வேண்டும் என்று தாம் விரும்புவதாகவும், அவர்களின் இடம்பெயர்வு தற்காலிகமாகவோ அல்லது நீண்ட காலமாகவோ இருக்கலாம் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
சனிக்கிழமை ஜோர்தான் மன்னர் அப்துல்லாவுடன் ஒரு தொலைபேசி அழைப்பிற்குப் பின்னரே ட்ரம்ப் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். சில அரபு நாடுகளுடன் இணைந்து, பாலஸ்தீன மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய வேறு இடத்தில் வீடுகளைக் கட்ட விரும்புவதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அதிக எண்ணிக்கையில்
காஸாவில் 2.3 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். அதிக எண்ணிக்கையில் பாலஸ்தீனியர்களை ஜோர்தான் ஏற்றுக்கொள்ளுமா என்று மன்னர் அப்துல்லாவிடம் கேட்டதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.
ஜோர்தானில் ஏற்கனவே 2.4 மில்லியன் பாலஸ்தீன அகதிகள் உள்ளனர், இவர்கள் 1948 இல் இஸ்ரேல் உருவாக்கப்பட்ட பின்னர் வெளியேற்றப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |