ஈரான் முழுமையாக சம்மதித்து விட்டது: கோதுமை, மக்காச்சோளம் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி: உண்மை என்ன?
அமெரிக்க விவசாய பொருட்களை ஈரான் இறக்குமதி செய்யும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
டொனால்ட் டிரம்ப் கருத்து
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் CNBC தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் வழங்கிய தகவலில், ஈரானுடனான தற்போதைய உறவு நிலை குறித்து விவரித்துள்ளார்.
அதில், அமெரிக்காவின் கோரிக்கைகளை ஈரான் கிட்டத்தட்ட முழுமையாக ஏற்றுக் கொண்டு விட்டதாகவும், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா இராணுவ ரீதியிலான வெற்றியை பெற்று விட்டதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் ஈரானில் நிலவும் உணவு பொருட்கள் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு அமெரிக்காவில் இருந்து ஈரானுக்கு விவசாய பொருட்களை இறக்குமதி செய்யப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
குறிப்பாக அவற்றில் கோதுமை, மக்காச்சோளம், சோயாபீன்ஸ் ஆகிய விவசாய பொருட்கள் முக்கிய பங்கு வகிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அமெரிக்காவிடம் இருந்து விவசாய பொருட்களை இறக்குமதி செய்து தொடர்பான தகவலை ஈரான் அரசு திட்டவட்டமாக ஏற்கனவே மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |