கூகுள், அமேசான் நிறுவனங்களை குறிவைக்கும் நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்
அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களை குறிவைக்கும் நாடுகளை ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், Google, Apple, Meta, Amazon போன்ற அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களை குறிவைத்து வரி விதிக்கும் நாடுகளுக்கு எதிராக கடுமையான வரி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்கவுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரித்தானியாவில் 2020 முதல் அமுலில் உள்ள Digital Service Tax (DST) மூலம் ஆண்டுக்கு 800 மில்லியன் பவுண்டுகள் வருமானம் பெறப்படுகிறது.
இது அமெரிக்க நிறுவனங்களுக்கு 2 சதவீத வரியை விதிக்கிறது.
பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் போன்ற மற்ற ஐரோப்பிய நாடுகளும் இதேபோன்றுஞ் DST விதிகளை பின்பற்றுகின்றன.
ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) Digital Service Act என்ற சட்டம் பாரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் உள்ளது.
இந்த வரிகள் சீனாவின் பாரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு சலுகை அளிக்கின்றன என்றும் அமெரிக்க நிறுவனங்களுக்கு தீங்கு விளைவிப்பதாகவும் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
தான் அழுத்தம் கொடுத்த பிறகு தான், கனடா தனது DST திட்டத்தை ரத்து செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவும், அமெரிக்க நிறுவங்களும் இனி உலகின் Piggy Bank அல்லது Doormat அல்ல என கூறியுள்ளார்.
இந்த வேறுபாடுகள் நீக்கப்படாவிட்டால், அந்த நாடுகளின் ஏற்றுமதிக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Trump tech tariffs 2025, US vs EU digital tax, UK Digital Services Tax, Trump export restrictions, Big Tech trade war, Trump China tech policy, US retaliation tariffs, Digital Services Act EU, Meta Google Amazon tariffs, Trump Truth Social statement