ட்ரம்பின் 15 சதவீத வரியால் நெருக்கடியில் பிரித்தானியா... ஒப்பந்தத்தைக் கைவிட இருக்கும் ஐரோப்பா

Europe England Trump tariff
By Arbin Feb 23, 2026 07:20 AM GMT
Report

அமெரிக்காவின் உச்ச நீதுமன்ற தீர்ப்பை அடுத்து, ட்ரம்பின் 15 சதவீத வரியானது உலகளாவிய வர்த்தை ஒழுங்கை மீண்டும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

மிக மோசமான பாதிப்பு

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உலகளாவிய பரஸ்பர வரிகளை ரத்து செய்யும் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ட்ரம்பிற்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு பதிலடியாக அவர் அனைத்து நாடுகளுக்கும் 15 சதவீத வரி விதித்தார்.

ட்ரம்பின் 15 சதவீத வரியால் நெருக்கடியில் பிரித்தானியா... ஒப்பந்தத்தைக் கைவிட இருக்கும் ஐரோப்பா | Trump Tariff Affects Trade Order

ட்ரம்பின் இந்த புதிய வரி விதிப்பில் இந்தியாவும் சீனாவும் நிம்மதியடைய, பிரித்தானியா கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. 18 சதவீதம் வரியை எதிர்கொண்டு வந்த இந்தியாவுக்கு இனி 15 சதவீதம் வரி செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியா மீது 50 சதவீத வரி அமுலில் இருந்த நிலையில், பிப்ரவரி மாதம் அதை 25 சதவீதமாக ட்ரம்ப் குறைத்தார். தொடர்ந்து அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதை அடுத்து, 18 சதவீதமாக வரி குறைக்கப்பட்டது.

ஆனால் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, பிரிவு 122 இன் கீழ் அனுமதிக்கப்படும் அதிகபட்ச வரியாக 15 சதவீதம் என ட்ரம்ப் அறிவித்தார். இதனால், இந்தியா இனி 15 சதவீதம் வரி செலுத்தும் நிலைக்கு வந்துள்ளது.

விமானங்கள் ரத்து... சுற்றுலாப்பயணிகளுக்கு எச்சரிக்கை: பற்றியெரியும் மெக்ஸிகோ

விமானங்கள் ரத்து... சுற்றுலாப்பயணிகளுக்கு எச்சரிக்கை: பற்றியெரியும் மெக்ஸிகோ

சீனா, மெக்ஸிகோ போன்ற நாடுகள் மீது விதிக்கப்பட்டிருந்த 10 சதவீத ஃபெண்டானில் வரிகளும் நீதிமன்றங்களால் நீக்கப்பட்டது. அத்துடன் ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்த ஒருதலைப்பட்ச வரிகளை ரத்து செய்யுமாறு சீனா திங்களன்று அமெரிக்காவை வலியுறுத்தியது.

இதனிடையே, ட்ரம்பின் உலகளாவிய வரிகளை ரத்து செய்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு, மிக மோசமான பாதிப்புக்குள்ளாகக்கூடும் என தெரிய வரும் நாடுகளில் பிரித்தானியாவும் ஒன்று.

ட்ரம்பின் 15 சதவீத வரியால் நெருக்கடியில் பிரித்தானியா... ஒப்பந்தத்தைக் கைவிட இருக்கும் ஐரோப்பா | Trump Tariff Affects Trade Order

மற்ற பல நாடுகளை விட பிரித்தானியா 10 சதவீதம் என்ற குறைவான பரஸ்பர வரியால் பயனடைந்து வந்தது. ஆனால் அனைத்து நாடுகளுக்கும் பொதுவாக 15 சதவீதமாக வரிகளை உயர்த்துவதாக ட்ரம்ப் அறிவித்ததால், தற்போது பிரித்தானியாவும் அதிக வரிகளை எதிர்கொள்ள நேரிடும்.

ஐரோப்பிய நாடாளுமன்றம்

இது அமெரிக்காவிற்கான பிரித்தானியாவின் ஏற்றுமதிக்கான செலவுகளை 3 பில்லியன் பவுண்டுகள் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் 40,000 பிரித்தானிய நிறுவனங்களைப் பாதிக்கலாம் என்றும் பிரித்தானிய வர்த்தக சபை கூறுகிறது.

இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்துடன் கடந்த ஆண்டு ஒப்புக் கொள்ளப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தின் விதிமுறைகளை அமெரிக்கா கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஆணையம் ஞாயிற்றுக்கிழமை கூறியது.

ட்ரம்பின் 15 சதவீத வரியால் நெருக்கடியில் பிரித்தானியா... ஒப்பந்தத்தைக் கைவிட இருக்கும் ஐரோப்பா | Trump Tariff Affects Trade Order

அத்துடன், , ட்ரம்ப் நிர்வாகத்திடமிருந்து அதன் வர்த்தகக் கொள்கை குறித்து முழு விவரங்களைப் பெறும் வரை, அமெரிக்காவுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக ஒப்பந்தத்தின் ஒப்புதல் செயல்முறையை இடைநிறுத்த ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் வர்த்தகத் தலைவர் முன்மொழிவார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி, சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம்

30 May, 2026
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
நன்றி நவிலல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரான்ஸ், France

31 May, 2012
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
14ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, New Jersey, United States, Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, London, United Kingdom

24 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், கெருடாவில்

21 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US