ட்ரம்பையே திருப்பி அடிக்கும் வரி விதிப்புகள்: பின்னணியிலிருக்கும் சுவிஸ் தயாரிப்பு
ட்ரம்பின் வரிவிதிப்புகளின் பலனை அவரே அனுபவிப்பார் போலிருக்கிறது.
ஆம், ட்ரம்ப் பயன்படுத்துவதாகக் கூறப்படும் ஒரு சுவிஸ் தயாரிப்பின் விலை, அவரது வரி விதிப்பாலேயே உயர்ந்துள்ளது!
ட்ரம்பையே திருப்பி அடிக்கும் வரி விதிப்புகள்
தனது வரி விதிப்புகளால் உலகையே கலக்கிக்கொண்டிருக்கிறார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்.
வரிகளை குறைப்பதற்காக, பல நாடுகளின் தலைவர்கள் தன் பின்னால் அலைந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை, மோசமான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார் ட்ரம்ப்.
ஆனால், அவர் விதித்த வரிகளால், அவர் பயன்படுத்துவதாக கூறப்படும், தோல் பராமரிப்புக்கு உதவும் ஒரு பொருளின் விலை உயர்ந்துள்ளது.
ட்ரம்ப் தன் முகத்துக்கு பயன்படுத்தும் Bronx Colors என்னும் நிறுவனத்தின் கிரீம் சுவிட்சர்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
ட்ரம்ப் சுவிட்சர்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 31 சதவிகித வரிகள் விதித்துள்ளதால், தற்போது அவர் முகத்துக்கு பயன்படுத்துவதாக கூறப்படும் கிரீமின் விலையும் அதிகரிக்க உள்ளது.
தனது வரி விதிப்புகள் அமெரிக்காவின் பொருளாதாரத்தை உயர்த்தும் என்கிறார் ட்ரம்ப்.
ஆனால், ட்ரம்பின் வரி விதிப்புகளால் அமெரிக்காவில் பொருட்கள் விலை அதிகரிக்கத்தான் போகிறது என்கிறார் துறைசார் நிபுணரான வில்லியம் பெய்ன் என்பவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |