பிரித்தானியா, கனடா உட்பட 80 நாடுகளின் மீது இடியை இறக்கிய டொனால்ட் ட்ரம்ப்
வெள்ளிக்கிழமை அதிகாலையுடன் காலாவதியாகவிருந்த 10 சதவீத உலகளாவிய சுங்கவரிக்கு மாற்றாக, அமெரிக்காவின் டசின் கணக்கான வர்த்தக நட்பு நாடுகள் மீது பரவலான புதிய சுங்கவரிகளை விதிக்க டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
80-க்கும் மேற்பட்ட
அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்தின் சவால்களுக்கு மத்தியிலும், தீவிரமான வர்த்தகக் கொள்கைகளை அமுல்படுத்துவதற்கான ட்ரம்பின் மிகச் சமீபத்திய முயற்சி இதுவென்றே கூறப்படுகிறது.

வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12:01 மணி முதல், பிரித்தானியா, மெக்சிகோ, கனடா, அவுஸ்திரேலியா, இந்தியா, இஸ்ரேல், சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 27 நாடுகள் உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட நாடுகளின் மீது அமெரிக்கா 10 சதவீதம் முதல் 12.5 சதவீதம் சுங்க வரியை விதிக்கவுள்ளது.
ட்ரம்ப் விதித்த முந்தைய பல வரிகள் சட்டவிரோதமானவை என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் அறிவித்ததை அடுத்து, பிப்ரவரியில் அவர் விதித்த 10 சதவீதப் பொதுவான வரியை தற்போதைய இந்த வரி விதிப்பு மாற்றி அமைக்கின்றது.
மேலும், வியாழக்கிழமை பிற்பகல் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீரால் அறிவிக்கப்பட்ட இந்தப் புதிய வரிகள், கட்டாய உழைப்பில் ஈடுபடும் நாடுகளுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள 1974-ஆம் ஆண்டு வர்த்தகச் சட்டத்தின் 301-வது பிரிவின் கீழ் வரும் என்றே கூறுகின்றனர்.
பிப்ரவரி மாத உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அறிவிக்கப்பட்ட உடனேயே, நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் மீது நிரந்தர வரிகளை விதிப்பதற்காகத் தனது நிர்வாகம் அது குறித்து விசாரணை நடத்தும் என்று ட்ரம்ப் கூறியிருந்தார்.
நியாயமற்ற நடைமுறை
இதனிடையே, அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளிகளில் ஒன்றான கனடா, கட்டாய உழைப்பைக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்வதற்கு எதிரான நடவடிக்கைகளில் முன்னணியில் இருப்பதாகக் குறிப்பிட்டு, தங்களை இதில் குறிவைக்கக் கூடாது என்று உடனடியாகப் பதிலளித்தது.

அமெரிக்க வேலைவாய்ப்புகளையும் உற்பத்தியையும் பாதுகாக்கவும், வர்த்தப் பற்றாக்குறையைக் குறைக்கவும், அமெரிக்க வர்த்தப் பங்காளிகள் பின்பற்றுவதாக அவர் கருதும் நியாயமற்ற நடைமுறைகளைத் தடுக்கவும், இறக்குமதிகள் மீது விதிக்கப்படும் எல்லை வரிகளான சுங்க வரிகளை ஒரு முக்கியக் கருவியாக ட்ரம்ப் நீண்ட காலமாகவே கருதி வந்துள்ளார்.
உண்மையில், அரசியலமைப்பின் கீழ் வரிகளை விதிக்கும் அதிகாரம் அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு மட்டுமே உள்ளது. மார்ச் மாதத்தில் ப்ரூக்கிங்ஸ் (Brookings) அமைப்பு மேற்கொண்ட சட்டப் பகுப்பாய்வின்படி, சமீபத்திய சுங்கவரி விதிப்புகள் 'பிரிவு 301'-ஐ அடிப்படையாகக் கொண்டுள்ளன; நீண்ட காலமாகவே சர்ச்சைக்குரியதாகக் கருதப்படும் இப்பிரிவு, இதுவரை மிகக் குறைவாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |