அமுலுக்கு வந்த ட்ரம்பின் புதிய வரி விதிப்பு... தீவிரமடையும் உலகளாவிய வர்த்தகப் போர்
அமெரிக்க எஃகு மற்றும் அலுமினிய இறக்குமதிகள் அனைத்திற்கும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிகரித்த வரிகள் புதன்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளன.
ட்ரம்பின் நடவடிக்கை
உலகளாவிய வர்த்தக விதிமுறைகளை அமெரிக்காவிற்கு ஆதரவாக மறுசீரமைக்கும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டதற்கு ஐரோப்பாவிலிருந்து விரைவான பதிலடியும் கிடைத்துள்ளது.
அமெரிக்க எஃகு மற்றும் அலுமினிய உற்பத்தியாளர்களுக்கான பாதுகாப்பை மொத்தமாக அதிகரிக்கும் ட்ரம்பின் நடவடிக்கையின் ஒருபகுதியாக, எஃகு மற்றும் அலுமினியத்தின் அனைத்து இறக்குமதிகளுக்கும் 25 சதவிகித வரி விதிப்பை அறிவிக்க, அது உலக நாடுகள் அனைத்திற்கும் பொருந்தும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன் இந்த உலோகங்களால் உருவாக்கப்படும் பொருட்களுக்கும், நட்டுகள் மற்றும் போல்ட்கள் முதல் புல்டோசர் பிளேடுகள் மற்றும் சோடா கேன்கள் வரை வரிகளை விதித்துள்ளார்.
இதனையடுத்து துரிதமாக செயல்பட்ட ஐரோப்பிய ஆணையம், அடுத்த மாதம் முதல் 26 பில்லியன் யூரோக்கள் ($28 பில்லியன்) மதிப்புள்ள அமெரிக்கப் பொருட்களுக்கு வரிகளை விதிக்கும் என அறிவித்துள்ளது.
மட்டுமின்றி, அமெரிக்காவின் நெருக்கமான நட்பு நாடுகளான கனடா, பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா இந்த வரி விதிப்பை கடுமையாக விமர்சித்துள்ளது. கனடா எதிர் வரி விதிப்புக்கு தயாராகி வரும் நிலையில், தேச நலன் கருதி உரிய முடிவெடுக்கப்படும் என பிரித்தானியாவும் அறிவித்துள்ளது.
மக்களுக்கு கிடைத்த வெற்றி
இந்த நிலையில் வரிகளும் அதிகரித்து வரும் வர்த்தக பதட்டங்களும் பொருளாதார ரீதியாக தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்ளும் ஒரு வடிவமாகும் என பதிலளித்துள்ள அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ்,
இது மெதுவான வளர்ச்சி மற்றும் அதிக பணவீக்கத்திற்கான ஒரு செய்முறையாகும் என்றார். அத்துடன் இந்த வரி விதிப்புகள் உண்மையில் பொதுமக்களையே பாதிக்கிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்காவிற்கு எஃகு மற்றும் அலுமினியத்தை ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய வெளிநாட்டு சப்ளையரான கனடா, வரிகளால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று.
கனடாவுக்கு மட்டும் 50 சதவிகித வரி விதிக்க இருப்பதாக ட்ரம்ப் மிரட்டல் விடுத்த நிலையில், கனடாவின் ஒன்ராறியோ மாகாணம் மின்சார ஏற்றுமதிக்கான வரியை கைவிட்டதை அடுத்து, ட்ரம்பும் தனது முடிவை மாற்றிக்கொண்டார்.
கனேடிய மாகாணத்தின் அந்த முடிவு அமெரிக்க மக்களுக்கு கிடைத்த வெற்றி என்றே வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். ட்ரம்பின் இந்த வரி விதிப்பை அமெரிக்க எஃகு மற்றும் அலுமினிய உற்பத்தியாளர்கள் வரவேற்றுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |