உலகின் மொத்த நாடுகளுடனும் சாத்தியமான வர்த்தகப் போருக்கு தயாராகும் ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பரஸ்பர வரிகளை விதிப்பதன் மூலம் தனது வர்த்தகப் போரை விரிவுபடுத்துவதாக அச்சுறுத்தியுள்ளார்.
ஒவ்வொரு நாடும்
ட்ரம்பின் இந்த முடிவால், அமெரிக்க நேச நாடுகள் மட்டுமின்றி, பெரும்பாலான அனைத்து நாடுகளும் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவே கூறப்படுகிறது.
அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் வரி விதிப்பதை ஆட்சிக்கு வந்த சில நாட்களில் ட்ரம்ப் செயல்படுத்தி வருகிறார். தற்போது கனடா, மெக்ஸிகோ உள்ளிட்ட நாடுகளுக்கு மார்ச் மாதம் வரையில் கால அவகாசம் அளித்துள்ளார்.
தேர்தல் பரப்புரையின் போது குறிப்பிட்டதை ட்ரம்ப் தற்போது ஆட்சிக்கு வந்ததும் செயல்படுத்தி வருகிறார். இனி ஒவ்வொரு நாடும் அமெரிக்காவுக்கு வரி செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
மோசமான நிலை
பரஸ்பர வரி விதிப்பால் மிக அதிகமாக பாதிக்கப்படுவது இந்தியா அல்லது தாய்லாந்தாக இருக்கலாம் என்றே நிபுணர்களின் கணிப்பாக உள்ளது. மட்டுமின்றி, இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி ட்ரம்பை சந்திக்கும் பொருட்டு வாஷிங்டனில் சென்றுள்ள நிலையில், இரு தலைவர்களும் நேரிடையாக சந்திக்கும் முன்னர் இந்த வரி விதிப்பு தொடர்பில் ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிடுவார் என்றே கூறப்படுகிறது.
மேலும், வரி விதிப்பதில் இந்தியா மிக மோசமான நிலையில் இருப்பதாக ட்ரம்ப் ஏற்கனவே குற்றஞ்சாட்டியிருந்தார். மேலும், பரஸ்பர வரி விதிப்பால் மெக்ஸிகோ, கனடா மற்றும் (தென்) கொரியா போன்ற சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களைக் கொண்ட நாடுகள், ஒட்டுமொத்த தாக்கத்தில் இருந்து தப்பிக்கும் என்றே நிபுணர்களின் கணிப்பாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |