ஹார்முஸ் சென்று எண்ணெய் எடுத்துக் கொள்ளுங்கள்! நட்பு நாடுகளிடம் டிரம்ப் காட்டம்
ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம் தொடர்பாக நட்பு நாடுகளுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேரடியாக சென்று எண்ணெயை பெற்றுக் கொள்ளுங்கள்
முக்கிய வணிக கடல் வழித் தடமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தங்கள் கட்டுப்பாட்டிற்கு வைத்து இருப்பதால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டால் சிரமப்படும் நட்பு நாடுகள் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

தன்னுடைய ட்ரூத் சோஷியல் பக்கத்தில் இது தொடர்பாக பதிவிட்டுள்ள டிரம்ப், அமெரிக்கா தன்னுடைய எரிசக்தி துறையில் தன்னிறைவு பெற்று இருப்பதாக சுட்டிக்காட்டினார். மேலும் நட்பு நாடுகள் தங்களின் எரிசக்தி தேவைகளை அமெரிக்கா நோக்கி திருப்ப வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அத்துடன் ஈரான் உடனான மோதலில் உதவ முன்வராத நட்பு நாடுகளை குறிப்பிட்டு, எரி பொருள் தேவைப்படும் நாடுகள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நேரடியாக ஹார்முஸ் ஜலசந்திக்கு சென்று தங்களுக்கு தேவையான எரிபொருளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தங்களுக்கு ஒத்துழைக்காத நாடுகளுக்கு இனி அமெரிக்காவும் பாதுகாப்பு அளிக்காது என்று எச்சரித்துள்ளார்.
பிரித்தானியாவை கடுமையாக சாடிய டிரம்ப்

ஈரான் தொடர்பில் ஒத்துழைப்பு வழங்காத பிரித்தானியாவை கடுமையாக சாடிய டிரம்ப், அமெரிக்காவுக்கு உதவாத நாடுகளுக்கு உதவும் எண்ணம் இல்லை என்று தெரிவித்தார்.
மேலும் அந்த நாடுகள் சுயசார்புடன் இருக்க கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் இது என்றும் டிரம்ப் விவரித்தார்.
ஈரான் முழுமையாக சிதைந்துவிட்டது, இனி அங்கு ஆபத்து இல்லை என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |