இந்திய நகரமொன்றின் தெருவுக்கு ட்ரம்ப் பெயர்: அமெரிக்கா நன்றி
இந்திய நகரமொன்றிலுள்ள தெரு ஒன்றிற்கு அமெரிக்க ஜனாதிபதியின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
தெருவுக்கு ட்ரம்ப் பெயர்
இந்தியாவின் தெலங்கானா மாநிலத்திலுள்ள ஹைதராபாத் நகரில், ஒரு தெருவுக்கு டொனால்ட் ட்ரம்ப் நிழற்சாலை என பெயரிடப்பட்டுள்ளது.

அந்த தெருவில் அமெரிக்க தூதரகம் அமைந்துள்ள நிலையில், அதற்கு அமெரிக்க ஜனாதிபதியின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
A historic moment in Hyderabad! In honor of America’s 250th birthday, Telangana’s Deputy Chief Minister Bhatti Vikramarka Mallu @Bhatti_Mallu unveiled the plaque officially renaming the road beside the U.S. Consulate as Donald Trump Avenue.
— U.S. Consulate General Hyderabad (@USAndHyderabad) June 24, 2026
A heartfelt thank you to the people of… pic.twitter.com/jMGSODoHkl
இந்திய நகரமொன்றிலுள்ள தெரு ஒன்றிற்கு இப்படி ஒரு அமெரிக்க ஜனாதிபதியின் பெயர் வைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
ஹைதராபாதிலுள்ள அமெரிக்கத் தூதரகம் சமூக ஊடகமான எக்ஸில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு, அமெரிக்காவின் 250 ஆவது பிறந்தநாளின்போது தெலங்கானா மாநிலம் அமெரிக்க தூதரகத்துக்கு அருகிலுள்ள தெருவுக்கு டொனால்ட் ட்ரம்ப் நிழற்சாலை என பெயரிட்டுள்ளது. தெலங்கானா மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், தனது சமூக ஊடகப் பக்கத்தில் இது குறித்து இடுகை ஒன்றை வெளியிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப், தனக்கு அளிக்கப்பட்ட கௌரவத்துக்காக நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
அதே இடுகைக்குக் கீழே, சில வாரங்களுக்கு முன்புதான் அமெரிக்க கடற்படை மூன்று இந்திய மாலுமிகளைக் கொன்றது, என ஒருவர் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |